Day: April 4, 2022

இந்தியாவுக்கு சப்ளை செய்ய எந்த தடைகளையும் சந்திக்க தயார் ரஷ்யா !!

April 4, 2022

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இந்தியாவுக்கு சுற்றுபயணமாக வந்துள்ளார். அவர் தலைநகர் தில்லியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் ஊடகங்களை சந்தித்து பேசிய அவர் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு நலன்களின் புரிதல்கள் அடிப்படையிலானது எனவும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாது எனவும் யாரும் இந்தியாவை மிரட்டி வைக்க முடியாது எனவும் கூறினார். மேலும் பேசும் போது ரஷ்யா […]

Read More

உக்ரைன் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு !!

April 4, 2022

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னர் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு சொந்தமான 600க்கும் அதிகமான இணையதளங்கள் மீது பல ஆயிரம் சைபர் தாக்குதல்கள் சீனாவால் நடத்தப்பட்டதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த தாக்குதல்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் முன்னரே துவங்கியதாகவும் ரஷ்ய படையெடுப்புக்கு முந்தைய நாள் உச்சத்தை தொட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அடுத்தடுத்து பதவி ஏற்று கொண்ட புதிய ராணுவ கமாண்டர்கள் !!

April 4, 2022

தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய தரைப்படை மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்று கொண்டனர். இந்திய தரைப்படையின் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் எஸ் எஸ் மஹால் பொறுப்பேற்று கொண்டுள்ளார் இவர் மஹர் ரெஜிமென்ட் அதிகாரி ஆவார். லெஃப்டினன்ட் ஜெனரல் சி பாஸி பொன்னப்பா இந்திய தரைப்படையின் அட்ஜூடன்ட் ஜெனரலாக பொறுப்பு ஏற்று கொண்டார் இவரும் மஹர் ரெஜிமென்ட் அதிகாரி ஆவார். லெஃப்டினன்ட் ஜெனரல் ஜாண்சன் பி மேத்யூ ஏற்கனவே தரைப்படையின் 3ஆவது […]

Read More

சுகோய், ரஃபேல் இருந்தும் ஏன் இந்திய விமானப்படை தேஜாஸை விரும்புகிறது ??

April 4, 2022

இந்திய விமானப்படை தன்னிடம் சுகோய்-30, ரஃபேல், மிராஜ்-2000, ஜாகுவார் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் இருந்தும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை அதிகம் விரும்புகிறது. உலகளாவிய ரீதியில் எஃப்-35, எஃப்-22, எஃப்-18, எஃப்-15, சுகோய்-35, சுகோய்-57, மிக்-31, க்ரைப்பன் போன்ற விமானங்கள் இருந்தும் இலகுரக போர் விமானங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் துருக்கு HURJET, இந்தியா TEJAS, சீனா L-15 மற்றும் JF-17 போன்ற இலகுரக போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து […]

Read More

ரஷ்ய எரிபொருள் கிடங்குகளை தாக்கவில்லை உக்ரைன் !!

April 4, 2022

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் உக்ரைன் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி இரண்டு எரிபொருள் கிடங்குகளை அழித்ததாக குற்றச்சாட்டு வைத்தது. இந்த தகவலை தாக்குதல் நடைபெற்ற பெல்கோரோட் நகரம் அமைந்துள்ள மாகாணத்தின் ஆளுநரான வியாச்செஸ்லாவ் கெட்கோவும் உறுதிபடுத்தினார். இந்த நிலையில் உக்ரைன் இந்த தாக்குதல் குற்றச்சாட்டுகளை மறுத்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக ரஷ்யர்கள் பொய் சொல்வதாக உக்ரைனுடைய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்தார் அதே நேரத்தில் உக்ரைனுடைய […]

Read More

இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் பாக் ராணுவ தளபதி !!

April 4, 2022

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இந்தியா உடனான பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகளை நாம் களைய வேண்டும், ராஜாங்க ரீதியாக காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் இஸ்லாமாபாத் பாதுகாப்பு கருத்தரங்கின் முடிவில் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கடும் இழப்புகளை சந்தித்த ரஷ்ய சிறப்பு படையணி !!

April 4, 2022

ரஷ்ய தரைப்படையின் தலைசிறந்த படையணிகளில் ஒன்று 331 கார்ட்ஸ் பாராசூட் ரெஜிமென்ட் ஆகும், தற்போது இந்த படையணியின் புகழுக்கு மிகப்பெரிய பங்கம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் பங்கு பெற்ற இப்படையணி மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து உள்ளது, இந்த படையணியின் 39 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். குறிப்பாக இப்படையணியின் கட்டளை அதிகாரியான கர்னல். செர்கேய் சூகாரேவ் மார்ச் 13ஆம் தேதி உக்ரைன் படைகளுடனான சண்டையில் கொல்லப்பட்டு உள்ளார். பெலாரஸ் நாட்டில் இருந்து உக்ரைனுக்குள் VDV படையினருடன் […]

Read More

கடந்த 3 ஆண்டுகளில் 2000 துணை ராணுவத்தினர் உயிரிழப்பு !!

April 4, 2022

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2042 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 2 வீரர்கள் மரணத்தை தழுவி உள்ளனர். இந்த தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலமாக பதிலளித்து போது தெரிவித்துள்ளார். இறந்து போன 2042 வீரர்களில் 247 Gazetted அதிகாரிகளும், 1995 Non-gazetted அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர், இவர்கள் CRPF,BSF,ITBP, SSB,CISF […]

Read More

நேபாளத்தை வளைத்து போட்ட இந்தியா; அதிரடி ஒப்பந்தங்கள் !!

April 4, 2022

சமீபத்தில் நேபாள பிரதமர் ஷேர் பஹதூர் துபா மூன்று நாள் சுற்றுபயணமாக இந்தியா வந்தார், இது அவர் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் ஆகும். தலைநகர் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இரு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்தனர். அந்த வகையில் பிஹாரின் ஜேநகரில் இருந்து நேபாளத்தின் குர்தா வரை 35 கிலோமீட்டர் நீள ரயில் பாதை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் […]

Read More

உக்ரைனில் விஷம் கலந்த உணவுகள் மூலம் கொல்லப்பட்ட ரஷ்ய படையினர் !!

April 4, 2022

உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் உக்ரைனிய மக்கள் ரஷ்ய வீரர்களை விஷம் கலந்த உணவுகள் மற்றும் மதுவை கொண்டு கொன்றுள்ளதாக உக்ரைனிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2 வீரர்கள் இப்படி கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் ரஷ்ய தரைப்படையின் 3ஆவது மோட்டார் ரைஃபிள் டிவிஷனை சேர்ந்த வீரர்கள் என கூறப்படுகிறது. இஸியம் எனும் விஷம் கலந்த கேக்குகள் மூலமாக 2 வீரர்கள் கொல்லப்பட்டு 28 வீரர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை […]

Read More