இந்திய அரசு நிறுவனமான Steel Authority of India Limited SAIL அதாவது இந்திய எஃகு ஆணைய லிமிடெட் நிறுவனத்தின் ஆலை ஒன்று சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் உள்ளது இந்த ஆலை இந்தியா தயாரிக்க உள்ள S5 நீர்மூழ்கிகளுக்கான அடுத்த தலைமுறை எஃகை தயாரித்துள்ளது.
S5 நீர்மூழ்கி கப்பல்கள் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத ஏவுகணை கப்பல்களாகும் இவை சுமார் 12,000 டன்கள் எடையுடன் 150 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் இவை மிக மிக நவீனத்துவம் கொண்டவையாக இருக்கும் இந்த நீர்மூழ்கி கப்பலின் கட்டுமானத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட உலோகத்தை தயாரித்துள்ளனர்.
பிலாய் ஆலை இத்தகைய பாதுகாப்பு துறைக்கு தேவையான உலோகங்களை தயாரிப்பதில் மிகுந்த அனுபவம் மிக்கதாகும் குறிப்பாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் போர் கப்பலிற்கு தேவையான சிறப்பு எஃகு தகடுகளை தயாரித்து வழங்கியது அந்த அனுபவத்தை S5 நீர்மூழ்கி கப்பல் கட்டுமான திட்டத்திலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்த அதிநவீன உலோகம் சோதனை கட்டத்தில் உள்ளது பல ஆண்டுகள் இந்த உலோகம் தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு கடலடி பிரச்சினைகளை எதிர்கொள்ள தகுதியானதா என கண்டறியப்பட்டு கடைசியாக S5 நீர்மூழ்கி கட்டுமானத்தில் பயன்படுத்தபடும் தற்போது இந்த புதிய அடுத்த தலைமுறை உலோகத்தை பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய உலோகத்தின் கண்டுபிடிப்பு இந்தியா பாதுகாப்பு துறைக்கு தேவையான உலோகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் அதாவது தற்சார்பு அடைவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மேலும் இது இந்தியாவின் கடற்படை திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை வருங்காலத்தில் இந்தியா பெரும் கடல்சார் சக்தியாக மாற இது ஒரு முன்னோடியாக அமையும் என்றால் மிகையாகாது.