உக்ரைனில் விஷம் கலந்த உணவுகள் மூலம் கொல்லப்பட்ட ரஷ்ய படையினர் !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on உக்ரைனில் விஷம் கலந்த உணவுகள் மூலம் கொல்லப்பட்ட ரஷ்ய படையினர் !!

உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் உக்ரைனிய மக்கள் ரஷ்ய வீரர்களை விஷம் கலந்த உணவுகள் மற்றும் மதுவை கொண்டு கொன்றுள்ளதாக உக்ரைனிய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

2 வீரர்கள் இப்படி கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் ரஷ்ய தரைப்படையின் 3ஆவது மோட்டார் ரைஃபிள் டிவிஷனை சேர்ந்த வீரர்கள் என கூறப்படுகிறது.

இஸியம் எனும் விஷம் கலந்த கேக்குகள் மூலமாக 2 வீரர்கள் கொல்லப்பட்டு 28 வீரர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 500க்கும் அதிகமான வீரர்கள் மதுவில் கலக்கப்பட்ட விஷத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.