இந்திய விமானப்படை தன்னிடம் சுகோய்-30, ரஃபேல், மிராஜ்-2000, ஜாகுவார் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் இருந்தும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை அதிகம் விரும்புகிறது.
உலகளாவிய ரீதியில் எஃப்-35, எஃப்-22, எஃப்-18, எஃப்-15, சுகோய்-35, சுகோய்-57, மிக்-31, க்ரைப்பன் போன்ற விமானங்கள் இருந்தும் இலகுரக போர் விமானங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் துருக்கு HURJET, இந்தியா TEJAS, சீனா L-15 மற்றும் JF-17 போன்ற இலகுரக போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து ஏற்றுமதி செய்யவும் முயற்சி செய்து வருகின்றன.
உலகளாவிய ரீதியில் இலகுரக போர் விமானங்களின் மவுசு அதிகரிக்க காரணமாக பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதாவது இவற்றின் விலை குறைவு, எடை குறைவு சிறிய.பாதுகாப்பு தேவைகளை சந்திக்க இவை தாராளமாக போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலகுரக போர் விமானங்கள் எளிதில் ரேடாரில் சிக்காது மேலும் சில சமயங்களில் பெரிய கனரக போர் விமானங்களையும் விஞ்சி விடும்
தரைப்படையின் படையணிகளுக்கு அருகில் இருந்து பாதுகாப்பு அளிக்க சிறந்தவை பெரிய விமானங்களை விடவும் மலிவு என்பதால் அதிக இலகுரக விமானங்கள் வாங்கலாம் என்பது போன்ற பல காரணங்கள் உள்ளன.
அதேபோல் இவற்றில் வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதி இருந்தால் அதன் மூலம் இவற்றால் அதிக தொலைவுக்கு பறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.