ஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த்

November 28, 2020

ஹவில்தார் கஜேந்தர் அவர்கள் உத்ரகண்டின் கனேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.ஜனதா இன்டர் கல்லூரியில் தனது படிப்பை முடிந்த கஜேந்தர் அவர்கள் படிக்கும் காலத்திலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அவரது ஆசிரியர்கள் நினைவு கூறுகின்றனர். 1991ல் கார்வால் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்தார் கஜேந்தர் அவர்கள்.அதன் பின் 10வது பாரா சிறப்பு படையில் இணைந்தார்.1999 கார்கில் போரிலும் கஜேந்தர் அவர்கள் பங்கெடுத்துள்ளார்.சிறந்த கமாண்டாவோக வலம் வந்த கஜேந்தர் அவர்கள் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி படையில் இணைந்தார். ஆபரேசன் பிளாக் […]

Read More

20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு

November 27, 2020

நவம்பர் 26 அன்று காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்கள் இருவரில் ஒருவர் தான் இருபது வயதே ஆன வீரர் யாஷ் திகம்பர் தேஷ்முக் அவர்கள். ரோந்து சென்ற வீரர்கள் மீது (101 மராத்தா லைட் இன்பான்ட்ரி) காரில் சென்ற மூன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில் தனது நண்பருக்கு வாட்ஸ்ஆப்பில் யாஷ் அவர்கள் அனுப்பிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. தனது […]

Read More

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன்

November 27, 2020

மேஜர் சந்தீப் அவர்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடிப் படை வீரர் ஆவார்.2008 மும்பை தாக்குதலில் மிகச் சிறப்பான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது வீரமரணம் அடைந்தவர்.அவரது வீரம்,தைரியம் மற்றும் போர்ச்சூழலில் காட்டிய வேகம் காரணமாக அமைதிக் காலத்தில் இந்தியாவின் மிக உயரின விருதான அசோக விருது பெற்றார். கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் 15, மார்ச் 1977 ல் பிறந்தார் மேஜர்.அவரது அப்பா இஸ்ரோவில் அதிகாரி.வீட்டிற்கு ஒரே பிள்ளையான சந்தீப் பெங்களூரில் தன் […]

Read More

மிக்-29 விமான விபத்து-விமானியை தேடும் பணி தீவிரம்

November 27, 2020

வியாழன் அன்று நடைபெற்ற மிக்-29 பயிற்சி விமான விபத்தில் சிக்கிய ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 26 நவம்பர் அன்று மாலை 5மணி அளவில் பயிற்சியில் இருந்த மிக்-29கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இரு விமானிகளில் ஒரு விமானி மீட்கப்பட்டுள்ளார்.மற்றொரு விமானியை வான் மற்றும் கடற்பரப்பு வழியாக தேடி வருகிறது கடற்டை. இந்த விமான விபத்து குறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

மும்பை தாக்குதல் – முழுமையான விளக்கம்

November 26, 2020

அவர்கள் அப்போது தான் இந்தியாவினுள் நுழைந்திருந்தனர்.அவர்களின் குறிக்கோள் மும்பையின் அமைதியை நிரந்தரமாக தகர்ப்பதே.எட்டு இடத்தை குறிவைத்து தாக்கினர்.சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்,ஓபராய் ஓட்டல்,தாஜ் பேலஸ்,லியோபோல்ட் கபே,காமா மருத்துவமனை, நரிமான் இல்லம்,யூதர்கள் சமூக அமைப்பு இருந்த இடம்,மெட்ரோ சினிமா,டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிலையம் அருகே மற்றும் சென் சேவியர் கல்லூரி ஆகிய இடங்களை தாக்கினர்.மேலும் மும்பை துறைமுகப் பகுதியான மசகான் (அங்கு தான் நமது கப்பல் கட்டும் தளம் உள்ளது) மற்றும் விலே பார்லே அருகே ஒரு […]

Read More

பயங்கரவாத தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம்

November 26, 2020

மாருதி காரில் சென்ற மூன்று பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் நோக்கி நடத்திய தாக்குதலில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இராணுவ வீரர்கள் அந்த காரை துரத்திய சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க மாபெரும் தேடுதல் வேட்டையை இராணுவ வீரர்கள் தொடங்கியுள்ளனர். கிடைத்த முதல்கட்ட தகவல்படி ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீநகர்-பாரமுல்லா பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காஷ்மீர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் […]

Read More

பிரிடேடர் ஆளில்லா விமானங்கள் படையில் சேர்ப்பு

November 25, 2020

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு மேம்பாடு அடைந்து வருகிறது.இந்தியா-சீனா சண்டை தற்போது நடைபெற்று வரும் வேளையில் தற்போது இந்திய கடற்படை அமெரிக்காவிடம் இருந்து இரு பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு பெற்று படையில் இணைத்துள்ளது. அவசர கால இறக்குமதியாக இந்த ரக ட்ரோன்களை பெற்று இந்திய கடற்படை தற்போது படையில் இணைத்துள்ளது.ஏற்கனவே 30 ட்ரோன்களை வாங்க முயற்சித்து நிதி பற்றாக்குறையால் தாமதம் அடைந்து வந்தது. இந்த ட்ரோன்கள் நவம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தியா வந்தடைந்தது.கடந்த நவம்பர் 21 […]

Read More

லான்ஸ் நாய்க் நாசிர் அகமது வானி

November 25, 2020

காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் செகி அஷ்முஜி கிராமத்தை சேர்ந்தவர் தான் லான்ஸ் நாய்க் நசிர் அகமது வானி அவர்கள்.இளவயதில் பயங்கரவாத இயக்கத்தில் இருந்த அவர்கள் பின்னாளில் மனம் திருந்தி 2004ல் இராணுவத்தில் இணைந்தார்.அவர் 162வது பட்டாலியன் பிராந்திய இராணுவத்தில் இணைந்தார்.இந்த பட்டாலியன் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி பட்டாலியனுடன் இணைந்து பணியாற்றியது.பல்வேறு ஆபரேசன்களில் கலந்துள்ள அவர் ஒரு தலைசிறந்த வீரராகவே விளங்கினார். அவரது சேவையின் போது சுமார் 17 மிக முக்கிய ஆபரேசன்களில் கலந்து கொண்டு இரு […]

Read More

1500கிமீ வரை செல்லும் பிரம்மோஸ்-இந்தியா திட்டம்

November 24, 2020

இந்தியா இன்று தரை இலக்குகளை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. இந்தியா தற்போது தொடர் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் வேளையில் பிரம்மோசின் ஏவு தொலைவை நீட்டிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.இந்தியா சுமார் 1500கிமீ வரை செல்லும் பிரம்மோஸ் மேம்பாடு திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த ஏவுகணையை தரை,நீர் மற்றும் ஆகாயம் என அனைத்திலும் […]

Read More

வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன் !!

November 24, 2020

சுதந்திர இந்தியாவின் கடற்படையை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன். 8 ஜூன் 1919ஆம் ஆண்டு இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் நாகர்கோவில் நகரில் இவர் பிறந்தார். 1935ஆம் வருடம் இந்திய மெர்கண்டைல் மரைன் பயிற்சியில் இணைந்தார் பின்னர் அங்கிருந்து 1937ஆம் வருடம் கடற்படை தேர்வெழுதி கடற்படையில் இணைந்த இருவரில் இவரும் ஒருவர், மற்றவர் முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஜல் கர்ஸெட்ஜி. இப்படி இருக்கையில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது, […]

Read More