பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இந்தியா உடனான பிரச்சினைகள் அனைத்தும் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்சினைகளை நாம் களைய வேண்டும், ராஜாங்க ரீதியாக காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் இஸ்லாமாபாத் பாதுகாப்பு கருத்தரங்கின் முடிவில் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.