சீன எல்லையோரம் இரண்டு முக்கிய விமானப்படை தளங்களை மேம்படுத்தும் இந்தியா !!
சமீபத்தில் வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் மூலமாக இந்தியா சீன எல்லையோரம் அமைந்துள்ள இரண்டு மிக முக்கியமான விமானப்படை தளங்களை மேம்படுத்தி நவீனமயமாக்கி வருவது தெரிய வந்துள்ளது, முதலாவது தளம் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரத்தில் அமைந்துள்ள பாக்டோக்ரா விமானப்படை தளம்.
இந்த தளம் சிக்கன் நெக் பாதை என அழைக்கப்படும் இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் மிகவும் குறுகிய பகுதியில் அமைந்துள்ளது. இது எதிரிகளுக்கு எளிதான இலக்காகும் இப்பகுதியை கைபற்றினால் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படும அபாயம் உள்ளது ஆகவே இந்த பகுதியின் பாதுகாப்பிற்கு இந்த தளம் இன்றியமையாதது ஆகும்.
செயற்கைகோள் புகைப்படங்கள் இந்த தளத்தில் உள்ள விமான ஒடுபாதையில் பல முக்கியமான மாற்றங்கள் கடந்த சில மாதங்களில் செய்யப்பட்டு உள்ளதை காட்டுகின்றன மேலும் இவற்றுடன கூடுதலாக விமானங்களை நிறுத்தி வைக்கும் ஷெட்டுகள ஆகியவையும் கட்டமைக்கப்பட்டு உள்ளதையும் இந்த புகைப்படங்கள் வெளிபடுத்தி உள்ளன. இரண்டாவது அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் நகரத்தில் அமைந்துள்ள சாபுவா விமானப்படை தளத்திலும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் மேற்குறிப்பிட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் தெரியப்படுத்தி உள்ளன.
விமானப்படை தளங்களில் மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு பணிகள் தவிர சீனா உடனான எல்லையோர பகுதிகளில் அசாத்திய வேகத்தில் BRO – Border Roads Organisation அதாவது எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு சாலைகளை அமைத்து வருகிறது, இந்த ஆண்டு மார்ச் மாதம் BRO மிக முக்கியமான நிம்மு – படும் – டார்ச்சா சாலைக்கான பணிகளை நிறைவு செய்துள்ளது இதன் காரணமாக இனி இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து லடாக் தலைநகர் லே வரை செல்வதற்கான விரைவாக செல்லக்கூடிய மற்றொரு பாதையும் கிடைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சாலையை NPD – Nimmu Padum Darcha என அழைக்கின்றனர். சுமார் 298 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையானது ஏற்கனவே லே செல்லக்கூடிய மற்ற இரண்டு சாலைகளை விடவும் தூரம் குறைவானது மேலும் இது லடாக் தலைநகர் லேவிற்கு செல்லக்கூடிய மூன்றாவது சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.