கடந்த 3 ஆண்டுகளில் 2000 துணை ராணுவத்தினர் உயிரிழப்பு !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on கடந்த 3 ஆண்டுகளில் 2000 துணை ராணுவத்தினர் உயிரிழப்பு !!

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 2042 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 2 வீரர்கள் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலமாக பதிலளித்து போது தெரிவித்துள்ளார்.

இறந்து போன 2042 வீரர்களில் 247 Gazetted அதிகாரிகளும், 1995 Non-gazetted அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர், இவர்கள் CRPF,BSF,ITBP, SSB,CISF & ASSAM RIFLES ஆகிய படைகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உயிரிழக்கும் துணை ராணுவத்தினரின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ஏதேனும் உதவி செய்திறதாக என கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு

25 லட்சம் ரூபாய் முதல் 45 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தொகையும் மற்றும் குடும்ப நல ஒய்வூதியம் ஆகியவை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்