இந்திய விமானப்படையை பாக் விமானப்படை சமாளிக்க இயலுமா ? அமெரிக்கா கருத்து

பாக்கின் சீன விமானங்களால் இந்திய விமானப்படைக்கு சவால் விடுக்க முடியாது அமெரிக்க விமானப்படை !!

அமெரிக்க விமானப்படை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமானப்படைகளின் பலத்தை ஆய்வு செய்து தனது பலத்துடன் ஒப்பீடு செய்யும் மேலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள விமானப்படைகளின் பலத்தை பற்றியும் ஆய்வறிக்கை தயார் செய்யும் அப்படி இந்திய பாகிஸ்தான் விமானப்படைகள் பற்றிய ஒரு அறிக்கையை பற்றிய
தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படை ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கிய போது அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து J-10CE ரக போர் விமானங்களை வாங்கியது மேலும் இவற்றின் வரவால் இந்திய விமானப்படையின் பலத்தை சமன் செய்துள்ளதாகவும் இந்திய ரஃபேல் விமானங்களில் உள்ள மிட்டியோர் ஏவுகணைகளுக்கு பதிலாக J-10CE விமானங்களுடன் சீன PL-15E ஏவுகணைகள் உள்ளதாகவும் கூறியது.

மேற்குறிப்பிட்ட J-10CE மற்றும் PL-15E ஆகியவை சீனாவின் ஏற்றுமதி ரக ஆயுதங்களாகும். இவற்றை சீனா மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் என விளம்பரப்படுத்தி வந்தது குறிப்பாக தனது PL-15 ஏவுகணைகள் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வான் இலக்குகளை கூட தாக்கி அழிக்கும் என விளம்பரம் செய்து வந்தது ஆனால் இது சாத்தியமில்லை என அமெரிக்க ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை சுமார் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டுமானால் அதை ஏவும் போர் விமானம் சுமார் 10 கிலோமீட்டர் உயரத்தில் மாக்1.2 வேகம் அதாவது மணிக்கு 1225 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும் ஆனால் இது அந்த விமானங்களுக்கு சாத்தியமில்லை ஆகவே அந்த ஏவுகணைகளால் 140 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே செல்ல முடியும்.

அதே போல் ஏற்றுமதி ரகமான PL-15E ஏவுகணைகள் 145 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என கூறப்பட்ட நிலையில் இதில் 30 சதவீதம் அளவிற்கு குறை ஏற்படும் என கூறப்படுகிறது அதாவது நடைமுறையில் 105 முதல் 110 கிலோமீட்டர் தொலைவு வரை மட்டுமே இவற்றால் பயணிக்க முடியும் எனவும் இதற்கு காரணம் அவற்றில் பயன்படுத்தப்படும் Dual Pulse motor என்ஜின் எனவும் அமெரிக்க விமானப்படையின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படையிடம் ஏற்கனவே அமெரிக்க தயாரிப்பு F-16C ரக போர் விமானங்களும் அவற்றில் பயன்படுத்த 110 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் AIM-120C AMRAAM ரக ஏவுகணைகளும் உள்ளன அதே நேரத்தில் இந்திய விமானப்படை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ASTRA MK-1 ரக ஏவுகணைகள் உள்ளன இவற்றாலும் 110 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் மேலும் அடுத்து வரவுள்ள ASTRA MK-2 சுமார் 130 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் ஆகவே பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை விடவும் வானிலக்கு தாக்குதலில் அதிக வலிமை பெற வாய்ப்பு இல்லை என அமெரிக்க அறிக்கையின்படி பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.