இராணுவம்

100 இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு ட்ரோன்கள் ராணுவத்துக்கு டெலிவரி !!

April 26, 2022

இந்தியாவை சேர்ந்த ஆல்ஃபா டிசைன் ALPHA DESIGN மற்றும் இஸ்ரேலை சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் ELBIT SYSTEMS ஆகியவை கூட்டு தயாரிப்பு முறையில் அதாவது எல்பிட் வடிவமைப்பில் ஆல்ஃபா தயாரிக்க பெங்களூர் தொழிற்சாலையில் ஸ்கைஸ்ட்ரைக்கர் SKYSTRIKER மிதவை குண்டுகளை தயாரித்து வந்தன. தற்போது இத்தகைய 100 ட்ரோன்களை இந்த நிறுவனங்கள் இந்திய ராணுவத்திடம் டெலிவரி செய்துள்ளன, மின்சக்தியில் இயங்கும் இவை 5 கிலோ எடையுடன் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விரைவில் அமேதியில் ஏகே203 துப்பாக்கி தொழிற்சாலை, 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிப்பு !!

January 15, 2021

தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே விரைவில் AK-203 துப்பாக்கி தயாரிப்புக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றார். மேலும் சுமார் 6,71,427 துப்பாக்கிகளும் 100% தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றார். ஒரு ஏகே203 துப்பாக்கியின் விலை சுமார் 70,000 ருபாய் மேலும் ஒரு துப்பாக்கிக்கு 6000 ருபாய் வீதம் ரஷ்யாவுக்கு லாபம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியமும் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய தரைப்படையில் ஹெலிகாப்டர் விமானிகளாக இனி பெண்களும் இணையலாம் – ஜெனரல் நரவாணே !!

January 14, 2021

தலைநகர் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ஜெனரல் நரவாணே தரைப்படையில் இனி ஹெலிகாப்டர் விமானிகளாக பெண்களும் இணையலாம் என்றார். அதாவது தரைப்படையின் ஏவியேஷன் கோர் படையில் தற்போது பெண் அதிகாரிகள் தரை கட்டுபாட்டு பிரிவில் பணியாற்றி வருகின்றனர். கூடிய விரைவில் பெண் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானிகளாகவும் இணையலாம் என அவர் தெரிவித்தார். இந்த வருடம் ஜூலை மாதம் இவர்கள் விமானிகளாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் பயிற்சி முடித்த பின் விமானிகளாக தங்களது பணியை தொடங்குவர். தற்போது இந்திய விமானப்படையில் […]

Read More

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பிற்கு புதிய கருவி கண்டுபிடித்த தமிழக ராணுவ அதிகாரி !!

January 14, 2021

தமிழ்நாட்டை சேர்ந்த தரைப்படை அதிகாரி கேப்டன் ராஜ் பிரசாத் ஆவார், இவர் பொறியியல் படையணியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இந்திய தரைப்படை நடத்திய நிகழ்ச்சியில் தனது கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்தார். 1) கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மற்றும் செயலிழக்க செய்யும் ரோபோட் 2) தொலைதூர வெடிப்புகளுக்கு வயர்லெஸ் கருவி ஆகியவை இவரின் கண்டுபிடிப்புகள் ஆகும்.

Read More

மேஜர் மொகித் சர்மா அவர்களின் வீரக்கதை

January 13, 2021

ஹரியானாவின் ரோடக் என்னுமிடத்தில் 13 ஜனவரி 1978 இரவு 10.30 மணி அளவில் பிறந்தது அந்த வீரக்குழந்தை.அவரது  பெற்றோரான ராஜேந்திர பிரசாத் மற்றும் சுசிலா சர்மா அவர்களின் இரண்டாவது குழந்தையாக உதித்தார் மேஜர்.அவரது குடும்பத்தார் அவரை செல்லமாக “சிண்டு” எனவும், அவரது நண்பர்கள் அவரை “மைக்” எனவும் அழைத்தனர். அவர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகன்,கிட்டார் நன்றாக வாசிப்பார். டெல்லியில் உள்ள மனவ் ஸ்தலி பள்ளியில் படிப்பை தொடங்கிய அவர், பிறகு 1988ல் காசியாப்பாத்தில் உள்ள  பள்ளியில் […]

Read More

6 லட்சம் கோடி -இந்திய வரலாற்றில் பிரமாண்ட பாதுகாப்பு பட்ஜெட் ??

January 13, 2021

2021ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் தீவிரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த 5 ஆண்டுகளில் தன்னிறைவு எனும் இலக்கை நோக்கி பாதுகாப்பு படைகள் பயணிக்க உள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. ஆகவே பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 85.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 6லட்சம் கோடி ருபாய்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் நமது பாதுகாப்பு பட்ஜெட் 3.37 லட்சம் கோடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More

சீனா பாகிஸ்தான் இணை இந்தியாவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே பேட்டி !!

January 13, 2021

இந்திய தரைப்படை தினம் வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதையொட்டி தலைநகர் தில்லியில் தரைப்படை தளபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய பாதுகாப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே, “சீனா பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மற்றும் பிற ஒத்துழைப்புகள் பெரிய அளவில் அதிகரித்து உள்ளதாகவும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருவதாகவும் அதை இந்தியா சமாளிக்கும் எனவும் கூறினார். மேலும் பேசுகையில் […]

Read More

91ஆவது கே9 வஜ்ரா டெலிவரி அசத்தும் L&T !!

January 12, 2021

குஜராத் மாநிலம் ஹசீரா பகுதியில் அமைந்துள்ள லார்சன் டுப்ரோ தொழிற்சாலையில் K9 வஜ்ரா தயாரிக்கபட்டு வருகின்றன. சில நாட்கள் முன்னர் தரைப்படைக்கான 91ஆவது K9 வஜ்ரா தயாரித்து ஒப்படைக்கப்பட்டது. இந்த கே9 வஜ்ராக்கள் பாலைவன சூழல்களில் திறம்பட இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

அத்துமீறி நுழைந்த 6 பாகிஸ்தான் இளைஞர்கள் பாக். இடம் மீண்டும் ஒப்படைப்பு !!

January 11, 2021

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் பஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களை நமது எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து சோதனையிட்டு விசாரித்தனர். பின்னர் சந்தேகத்துக்கு இடமான செயல்பாடுகளோ பொருட்களோ இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் பாக் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Read More

50%க்கும் அதிகமான இந்திய ராணுவ வீரர்கள் தீவிர மன உளைச்சலால் பாதிப்பு !!

January 11, 2021

யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு இந்திய பாதுகாப்பு படையினரின் நலன்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். இந்த அமைப்பு சார்பில் கர்னல் ஏ.கே. மோர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்திய ராணுவ வீரர்களில் 50% க்கும் அதிகமானோர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக பயங்கரவாத எதிர்ப்பு போரில் பங்கெடுப்பது, குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது, பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவை […]

Read More