ஆம்கா விமானத்தில் புகுத்தப்படும் மிகவும் உயர்தரமான அதிநவீன தொழில்நுட்பம் என்ன ஒரு பார்வை !!

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று தான் உள்நாட்டிலேயே முழுவதும் வடிவமைத்து தயாரிக்கப்படும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான ஆம்கா AMCA – Advanced Multirole Combat Aircraft அதாவது அதிநவீன பல திறன் போர் விமானமாகும். ஒவ்வொரு நாளும் செல்ல செல்ல இந்த விமானத்தை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான புதிய தகவல்கள் வெளிவந்து இதை பற்றிய எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்கின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி ஆம்கா போர் விமானத்தில் ஒரு மிகவும் உயர்தரமான அதிநவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட உள்ளது அதாவது FSS RADOMES – Frequency Selective Surfaces Radomes ஆகும் வழக்கமாக ரேடார் மையங்களில் கால்பந்து போன்ற அமைப்புகளை பார்த்திருப்பீர்கள், இந்த அமைப்புகளுக்குள் பல்வேறு ஆன்டெனாக்கள் மற்றும் ரேடார்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், ஆனால் அவை சாதாரணமானவை இந்த FSS RADOME ரேடோம்கள் மிகவும் வேறுப்பட்டவை ஆகும்.

இந்த FSS ரேடோம்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்கள் பல்வேறு கூட்டு உலோகங்களின் கலவையாகும், இவற்றிற்கென தனித்துவமான மின்காந்த தன்மைகள் உண்டு, மேலும் இவற்றை பிரத்தியேக முறையில் வடிவமைத்தால் சில அலைவரிகளை எதிர்க்கவும் சில அலைவரிசைகளை தன்னை ஊடுருவி செல்லவும் அனுமதிக்கும். ஆம்காவில் உள்ள ரேடோம்கள் தகவல் தொடர்பு வழிகாட்டி அலைவரிகளை அனுமதித்து எதிரி அலைவரிகளை எதிர்த்து நிராகரிக்கும்.

அதாவது எதிரிகளின் ரேடார் அலைவரிகள் விமானத்தை ஊடுருவினால் உள்ளே உள்ள அமைப்புகளில்பட்டு விமானத்தின் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும் ஆகவே எதிரிகளின் அலைவரிசைகளை மட்டும் பிரித்தறிந்து அவற்றை அனுமதிக்காது இதனால் ஆம்கா விமானத்தின் ஸ்டெல்த் தன்மை பலமடங்கு அதிகரிக்கும் போர் களத்தில் எதிரி அமைப்புகளில் சிக்காமல் இயங்குவதற்கு இது வழிவகுக்கும் மேலும் இது எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து பாலகோட் போன்ற தாக்குதல்களை சர்வசாதாரணமாக நடத்த உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது DRDO – Defence Research & Development Organisation பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான Research Centre Imarat தான் உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் இந்தியா மின்காந்த ஆராய்ச்சி துறையில் வெகுவாக முன்னேறி உள்ளதை சுட்டிகாட்டுவதாக உள்ளது,இந்த தொழில்நுட்பம் ஆம்கா போர் விமானத்தை சிறப்பான ரேடார் எதிர்ப்பு திறன்களை கொண்ட உலகின் மற்ற முன்னனி ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களுக்கு இணையான வரிசையில் வைக்கிறது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.