ரஷ்ய எரிபொருள் கிடங்குகளை தாக்கவில்லை உக்ரைன் !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on ரஷ்ய எரிபொருள் கிடங்குகளை தாக்கவில்லை உக்ரைன் !!

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் உக்ரைன் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி இரண்டு எரிபொருள் கிடங்குகளை அழித்ததாக குற்றச்சாட்டு வைத்தது.

இந்த தகவலை தாக்குதல் நடைபெற்ற பெல்கோரோட் நகரம் அமைந்துள்ள மாகாணத்தின் ஆளுநரான வியாச்செஸ்லாவ் கெட்கோவும் உறுதிபடுத்தினார்.

இந்த நிலையில் உக்ரைன் இந்த தாக்குதல் குற்றச்சாட்டுகளை மறுத்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

ஏதோ ஒரு காரணத்திற்காக ரஷ்யர்கள் பொய் சொல்வதாக உக்ரைனுடைய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் தெரிவித்தார்

அதே நேரத்தில் உக்ரைனுடைய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மோட்டுஸியானிக் மறுக்கவோ ஆமோதிக்கவோஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.