Breaking News

தொழில்நுட்பம்

100 இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பு ட்ரோன்கள் ராணுவத்துக்கு டெலிவரி !!

April 26, 2022

இந்தியாவை சேர்ந்த ஆல்ஃபா டிசைன் ALPHA DESIGN மற்றும் இஸ்ரேலை சேர்ந்த எல்பிட் சிஸ்டம்ஸ் ELBIT SYSTEMS ஆகியவை கூட்டு தயாரிப்பு முறையில் அதாவது எல்பிட் வடிவமைப்பில் ஆல்ஃபா தயாரிக்க பெங்களூர் தொழிற்சாலையில் ஸ்கைஸ்ட்ரைக்கர் SKYSTRIKER மிதவை குண்டுகளை தயாரித்து வந்தன. தற்போது இத்தகைய 100 ட்ரோன்களை இந்த நிறுவனங்கள் இந்திய ராணுவத்திடம் டெலிவரி செய்துள்ளன, மின்சக்தியில் இயங்கும் இவை 5 கிலோ எடையுடன் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா வரும் புதிய பிரித்தானிய அதிநவீன “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பு !!

January 15, 2021

இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் தேல்ஸ் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி தேல்ஸ் நிறுவனத்தின் “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பை 60% இந்தியாவில் தயாரிக்க உள்ளனர். மேலும் இது இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளின் குறுந்தூர வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவைகளை சந்திக்கும். இந்த ஸ்டார் ஸ்ட்ரீக் ஏவுகணை சுமார் 4 மாக் அதாவது மணிக்கு 1300கிமீக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது, இது உலகிலேயே அதிவேகமான […]

Read More

போர் விமான என்ஜின்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ஃபிரான்ஸ் விருப்பம் !!

January 10, 2021

இந்தியா வந்துள்ள ஃபிரான்ஸ் அரசின் ஆலோசகர் இம்மானுவேல் போன் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அப்போது ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் M88 Engine ரக என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், இலகுரக போர் விமானம் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஆம்கா ஆகியவற்றிற்கான இரட்டை என்ஜின்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் ஃபிரான்ஸ் விரும்புவதாக குறிப்பிட்டார்.

Read More

இலகுரக ட்ரோன் உருவாக்கும் பணியை துவங்கிய இந்தியா !!

January 8, 2021

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இலகுரக ட்ரோன்களை உருவாக்கும் பணியை துவங்கி உள்ளது. இவை கிரெனேட் லாஞ்சர்களில் இருந்து ஏவும் வகையிலும், சுமார் 40 நிமிடங்கள் பறக்கும் வகையிலும் வடிவமைக்கப்படும். இவை எந்த நேரத்திலும் எந்த கால சூழலிலும் இயங்கும் திறன் கொண்டவை ஆகும், இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

Read More

இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விருப்பம் !!

January 8, 2021

இந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களை தயாரிக்க டஸ்ஸால்ட் நிறுவனம் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா வந்துள்ள ஃபிரெஞ்சு அதிபரின் ஆலோசகர் இம்மானுவேல் போன் இந்த விஷயம் பற்றி இந்திய அரசிடம் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நூறு அல்லது அதற்கு நெருங்கிய எண்ணில் இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்க விரும்பினால் இந்தியாவிலேயே தயாரித்து கொடுக்க விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

இந்திய இஸ்ரேல் தயாரிப்பு MRSAM அமைப்பு வெற்றிகரமாக சோதனை

January 6, 2021

கடந்த வாரம் இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்தியுள்ள நடுத்தூர வகை வான் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.50-70கிமீ தூரத்திற்குள் வரும் எதிரியின் விமானங்கள்,க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை சுட்டுவீழ்த்த வல்லது இந்த அமைப்பு. டிஆர்டிஓ மற்றும் இஸ்ரேலின் ஐஏஐ இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு இராணுவங்களின் பயன்பாட்டில் உள்ளன.இந்த அமைப்பில் ஒரு கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி அமைப்பு, ஒரு அதிநவீன ரேடார் , நகரக்கூடிய […]

Read More

அக்னி 5 ஏவுகணையை விரைவில் படையில் இணைக்க உள்ள இந்தியா !!

January 5, 2021

5000கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையான அக்னி5ஐ விரைவில் படையில் இணைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முழு அளவிலான தயாரிப்பு பணிகளை எட்டியுள்ள இந்த ஏவுகணை அடுத்த சில மாதங்களில் படையில் இணைக்கப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணை ஒட்டுமொத்த ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பாவில் பாதியை தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது கூடுதல் தகவல். மேலும் எல்லையில் சீனாவின் அடாவடித்தனம் இந்த ஏவுகணையை படையில் விரைந்த இணைக்க […]

Read More

2021இல் இந்தியாவின் தாக்கும் சக்தியை அதிகரிக்க உள்ள ஐந்து ஏவுகணைகள் குறித்த பார்வை

January 2, 2021

2020இல் இந்தியா, டிஆர்டிஓ மேம்படுத்திய பல்வேறு ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து பார்த்தது. மேலும் DRDO பல்வேறு ஏவுகனைகளை தற்போது மேம்படுத்தி வருகிறது. அதைபோல் 2021லும் இந்தியா DRDO மேம்படுத்தி வரும் புதிய ஏவுகணைகளை சோதனை செய்ய உள்ளது. 1)பிரம்மோஸ் ER பிளாக் 4 இந்தியா ஏற்கனவே 290 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை 400கிலோமீட்டர் வரை தாக்கும் அளவுக்கு தூரத்தை அதிகரித்துள்ளது. அதை மேலும் 800 கிலோ மீட்டராக அதிகரிக்க தற்போது பிரம்மோஸ் ER […]

Read More

புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க விஞ்ஞானிகள உழைக்க வேண்டும் – டி ஆர் டி ஒ தலைவர் !!

January 2, 2021

வெள்ளிக்கிழமை அன்று டி ஆர் டி ஒ தனது 60ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது அதனை அடுத்து அன்று டி ஆர் டி ஒ தலைவர் பேசிய காணொளியில் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும், விண்வெளி, சைபர் பாதுகாப்பு சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்க உழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை தவிர பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் […]

Read More

ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு ஏற்றுமதி செய்ய பிரதமர் அனுமதி

December 30, 2020

பிரதமர் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகாஷ் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பாகும். இது 96% இந்தியத் தயாரிப்பு ஆகும்.30 கிலோமீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடியது. இந்தியாவுக்காக மேம்படுத்தி உள்ள ஆகாஷ் வான்பாதுகாப்பு ஏவுகணைகளை விட வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள ஏவுகணை அமைப்புகள் சிறிது மாறுபட்டு இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

Read More