உக்ரைன் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு !!

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னர் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு சொந்தமான 600க்கும் அதிகமான இணையதளங்கள் மீது பல ஆயிரம் சைபர் தாக்குதல்கள் சீனாவால் நடத்தப்பட்டதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த தாக்குதல்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடையும் முன்னரே துவங்கியதாகவும் ரஷ்ய படையெடுப்புக்கு முந்தைய நாள் உச்சத்தை தொட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.