அடுத்தடுத்து பதவி ஏற்று கொண்ட புதிய ராணுவ கமாண்டர்கள் !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on அடுத்தடுத்து பதவி ஏற்று கொண்ட புதிய ராணுவ கமாண்டர்கள் !!

தொடர்ந்து அடுத்தடுத்து இந்திய தரைப்படை மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்று கொண்டனர்.

இந்திய தரைப்படையின் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் எஸ் எஸ் மஹால் பொறுப்பேற்று கொண்டுள்ளார் இவர் மஹர் ரெஜிமென்ட் அதிகாரி ஆவார்.

லெஃப்டினன்ட் ஜெனரல் சி பாஸி பொன்னப்பா இந்திய தரைப்படையின் அட்ஜூடன்ட் ஜெனரலாக பொறுப்பு ஏற்று கொண்டார் இவரும் மஹர் ரெஜிமென்ட் அதிகாரி ஆவார்.

லெஃப்டினன்ட் ஜெனரல் ஜாண்சன் பி மேத்யூ ஏற்கனவே தரைப்படையின் 3ஆவது கோரை வழிநடத்தி வந்த நிலையில் தற்போது உத்தர் பாரத் ஏரியாவின் தளபதியாக பொறுப்பு ஏற்று கொண்டுள்ளார், இவர் பஞ்சாப் ரெஜிமென்ட் அதிகாரி ஆவார்.

லெஃப்டினன்ட் ஜெனரல் எம் கே கத்தியார் இந்திய தரைப்படையின் நடவடிக்கை பிரிவின் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார் இவர் ராஜ்புத் ரெஜிமென்ட் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையின் துணை தளபதியாக வைஸ் அட்மிரல் சஞ்சய் மஹிந்த்ரூ வைஸ் அட்மிரல் ரவ்னீத் சிங் இடமிருந்து பொறுப்பை பெற்று கொண்டார்.

அதை போல வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார் பூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் கமாண்டன்ட் ஆக இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் சஞ்சீவ் கபூரிடமிருந்து பொறுப்பை பெற்று கொண்டார்.