கனடா பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பேசும்போதே எழுப்பப்பட்ட காலிஸ்தான் கோஷம் !!

  • Tamil Defense
  • May 2, 2024
  • Comments Off on கனடா பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பேசும்போதே எழுப்பப்பட்ட காலிஸ்தான் கோஷம் !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்ற சிக்கியர்களின் பண்டிகையான கால்சா தின விழாவில் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் முன்னிலையிலேயே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பினர் இது தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனெடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு அந்த விழாவில் கனடாவில் வாழும் 8 லட்சத்திற்கும் அதிகமான சீக்கியர்களுக்கு எப்போதும் கனெடிய அரசு பாதுகாப்பு அளிக்கும் எனவும் அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கனடா எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது எந்த விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் எனவும் பேசினார் அப்போது தான் காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பேசிய ட்ருடியு இந்தியாவில் உள்ள உங்கள் உறவுகளை பார்க்க நீங்கள் ஆவலோடு இருப்பது பற்றி எங்களுக்கு தெரியும் ஆகவே இந்தியாவுக்கு குறிப்பாக அமிர்தசரஸ் நகரத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்குவது பற்றி இந்திய அரசுடன் நமது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறினார்.

ஏற்கனவே இந்தியா கனடா இடையில் இந்த விவகாரம் காரணமாக கடுமையான மோதல் போக்கு நிலவும் சூழலில் இந்த சம்பவம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது இதை தொடர்ந்து இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் கனடிய துணை தூதரை அழைத்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது மேலும் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகைய சம்பவங்கள் கனடாவில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை காட்டுகிறது என கூறியுள்ளது.

ஏற்கனவே நிஜ்ஜார் விவகாரத்தில் இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு குற்றம்சாட்டிய நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடிய தூதரை வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து கண்டனம் தெரிவித்து மேலும் ஒரு மூத்த கனேடிய தூதரக அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் காலிஸ்தான் சக்திகளுக்கு கனடிய அரசியலில் தாராளமாக இடம் கொடுக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.