இந்திய கடற்படை நீண்ட காலமாகவே மூன்று விமானந்தாங்கி கப்பல்களை இயக்க விரும்பி வருவது அனைவரும் அறிந்ததே, ஆனால் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக தற்போது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் திட்டத்தை தள்ளி போட்டுவிட்டு 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை கட்ட உள்ளது. அதை போல இந்திய கடற்படை 4 எல்.பி.டி ரக கப்பல்களை பெற விரும்பிய நிலையில் பட்ஜெட் தட்டுபாடு காரணமாக 2 கப்பல்கள் மட்டுமே பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களை சிறிய விமானந்தாங்கி கப்பல்களாகவும் […]
Read Moreநேற்று லட்சத்தீவுகள் அருகே இந்திய கடற்படையின் ரோந்த கப்பலான ஐ.என்.எஸ் சுவர்ணா சந்தேகத்துக்கு இடமான இலங்கை படகை இடைமறித்தது. பின்னர் படகை சோதனையிட்ட கடற்படையினர் சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் படகு பறிமுதல் செய்யப்பட்டு அதில் இருந்தவர்கள் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை போல கடந்த மார்ச் 18 ஆம் தேதி சுமார் 3000 கோடி மதிப்பிலான ஹெராயின் இந்திய கடலோர காவல்படையால் ஒரு பாக் படகில் இதே பகுதியில் கண்டுபிடிக்கபட்டது. […]
Read Moreஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மார்க்-3 நேற்று கடற்படையில் இணைந்தது. கோவாவில் உள்ள கடற்படை தளத்தில் மேற்கு கடற்படை கட்டளையக தளபதி வைஸ் அட்மிரல் ஹரிகுமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவை படையில் இணைந்தன. இவை பல்திறன் ஹெலிகாப்டர்களாகும் மேலும் இவற்றை தேடுதல் மற்றும் மீட்பு, கடலோர கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர்களில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்த ஷக்தி என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு […]
Read Moreவருகிற ஞாயிற்றுக்கிழமை முதலாக இந்தியா ஃபிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படைகள் பஙாகேற்கும் முத்தரப்பு கடற்படை பயிற்சி துவங்க உள்ளது. வருணா கடற்படை பயிற்சியானது கடந்த 1993 முதல் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையே நடைபெறும் கடற்படை போர் பயிற்சிகள் ஆகும். இந்த வருடம் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக கடற்படையும் பங்கேற்க உள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்த பயிற்சிகள் பெர்சியன் வளைகுடா பகுதியில் நடைபெற உள்ளது, இந்த பயிற்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும் […]
Read Moreஏற்கனவே பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் இந்தியாவுடன் அமைதியை பேண விரும்புகிறது. எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அதிக அளவில் ஆயுதங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது அதனால் அதிக செலவும் ஏற்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஊடகவியலாளர் மற்றும் புவிசார் அரசியல் நிபுணர் நஜாம் சேத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் பணவீக்கம் காரணமாக பட்ஜெட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாகாகுதல் நடத்துவது மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி […]
Read Moreஇந்திய விமானப்படை தளபதி வருகிற 21ஆம் தேதியன்று ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 6 ரஃபேல் விமானங்களை இந்தியா நோக்கி வழியனுப்பி வைக்கிறார். இந்த 6 விமானங்கள் இந்தியா வருகையில் பல்திறன் போர் விமானங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானங்கள் அம்பாலா தளம் வந்து அங்கிருந்து ஹஸிமாரா தளம் செல்லும் அங்கு இந்த விமானங்களை கொண்டு இரண்டாவது ரஃபேல் படையணி உயிர்ப்பிக்கப்படும். மேலும் பனாகர் தளத்தில் உள்ள சி-130 படையணி மற்றும் மேற்குறிப்பிட்ட ரஃபேல் […]
Read Moreஇந்திய கடற்படை தனது டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கல்வரி மற்றும் சூப்பர் கல்வரி (அதாவது ஸ்கார்பீன் மற்றும் சூப்பர் ஸ்கார்பீன்) ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்க விரும்புகிறது. இவற்றில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த ஏ.ஐ.பி அமைப்புகள் பொருத்தப்படும். தற்போது படையில் இணைந்து வரும் 6 கல்வரி ரக நீர்மூழ்கி கபபல்களும் வருகிற 2032ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பை பெறும் என கூறப்படுகிறது. […]
Read Moreஇந்தியா டுடேவில் சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் இந்திய கடற்படை தனது 6 எதிர்கால நீர்மூழ்கிகளுக்கான பணிகளை துவக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த 6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களிலும் பம்ப் ஜெட் அமைப்பு மற்றும் 150 மெகாவாட் நீரழுத்த அணு உலை இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல எஸ்-5 ரக பலிஸ்டிக் ஏவுகணை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களிலும் அணு உலை தவிர்த்து இதே தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 6 […]
Read Moreமிக நீண்ட நாட்களாக சீனா ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் இருக்கும் ஜூவான் ஃபிலிப்பே ரீஃப் பகுதியில் பிரச்சினை செய்து வந்தது. தனது கடலோர காவல்படை மற்றும் ஆதரவு குழுக்களை களமிறக்கி அந்த பகுதியை உரிமை கோரியது அதற்கு விட்சுன் ரீஃப் என சீன மொழியிலும் பெயரிட்டது. இந்த நிலையில் அமெரிக்க கடற்படையின் தியோடர் ரூஸ்வெல்ட் தாக்குதல் படையணி அங்கு அனுப்பி வைக்கப்பட்டது, கூடுதலாக கடந்த 9 வருடங்களில் முதல் முறையாக ஃபிலிப்பைன்ஸ் கடற்படையும் […]
Read Moreகாஷ்மீரில் இந்திய தரைப்படை வழக்கமாக சிகப்பு நிற கொடிகளை தனது வாகனங்களில் பயன்படுத்தி வந்தது. தற்போது இந்த சிகப்பு நிற கொடிகளை மாற்றி விட்டு நீல நிற கொடிகளை ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி கர்னல் கான் பேசும்போது காஷ்மீரில் மக்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கவே கொடிகளின் நிறத்தை மாற்றி உள்ளோம் மேலும் ராணுவ கன்டோன்மென்ட் மற்றும் முகாம்களிலும் மாற்றம் செய்ய உள்ளோம் என்றார். ராணுவ கன்டோன்மென்ட் மற்றும் முகாம்களின் சுற்றுசுவர்களில் காஷ்மிரை சேர்ந்த இளம் சாதனையாளர்களின் […]
Read More