Day: October 6, 2021

114 போர் விமானங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் வாங்கப்படும் இந்திய விமானப்படை தளபதி !!

October 6, 2021

நேற்று இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு இந்திய விமானப்படை தளபதி பேட்டி அளித்தார். அப்போது இந்திய விமானப்படைக்கு சுமார் 114 மல்டிரோல் அதாவது பலதிறன் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான போட்டியில் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-21 மற்றும் போயிங் எஃப்/ஏ-18, ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் ரஃபேல், யூரோஃபைட்டர் டைஃபூன், ரஷ்ய மிக்-35 மற்றும் சுவீடனின் சாப் க்ரைப்பன் ஆகியவை உள்ளதாகவும் […]

Read More

அதிகரிக்கும் சீன தொந்தரவு புதிதாக 10,000 வீரர்களை படையில் சேர்க்க ITBP திட்டம் !!

October 6, 2021

தொடர்ந்து எல்லையோரம் சீன தொந்தரவு மற்றும் அடாவடிகள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக சுமார் 10,000 புதிய வீரர்களை படையில் சேர்க்க ITBP விரும்புகிறது. இந்திய சீன எல்லையை பாதுகாப்பதிலும் கண்காணிப்பதிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் புதிதாக 47 எல்லை காவல் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு எல்லை காவல்சாவடியிலும் சுமார் 180 வீரர்கள் காவல்பணியில் இருப்பர் மேலும் துருப்புகளுக்கு சப்ளைகள் வழங்குள் 12 மையங்கள் அமைக்கபட […]

Read More

மூன்றாம் உலக போர் எந்நேரமும் வெடிக்கலாம் சீனா எச்சரிக்கை !!

October 6, 2021

சீனா எந்நேரமும் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது, சமீபத்தில் தைவான் நாட்டு வான்பரப்பில் டஜன் கணக்கான சீன போர் விமானங்கள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை ஒன்றில் அமெரிக்கா மற்றும் தைவான் இடையிலான நெருக்கம் எல்லை மீறி சென்று விட்டதாகவும், சீன மக்கள் தைவானுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் அமெரிக்காவுடனான போரில் சீன அரசுக்கு பக்கபலமாக இருந்து முழு ஆதரவு அளிப்பார்கள் என […]

Read More

அமெரிக்க கடற்படை எஃப்18 போர் விமானம் விபத்து !!

October 6, 2021

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஃப்/ஏ 18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானம் இன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெத் வேல்லி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் முற்றிலும் சேதமான நிலையில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், சிறிய காயங்களுடன் அவர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் சைனா லேக் பகுதியில் உள்ள கடற்படை வான் ஆயுத தளத்தில் இருந்து இயங்கும் வான் சோதனை படையணியை சேர்ந்த விமானம் ஆகும். பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத […]

Read More

இந்தியா ஜப்பான் கடற்படைகள் இடையே கூட்டு பயிற்சி அறிவிப்பு வெளியானது !!

October 6, 2021

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் கடற்படைகள் இடையே ஐந்தாவது இருதரப்பு கடற்படை கூட்டு பயிற்சிகளுக்கான அறிவிப்பு பாதுகாப்பு அமைசகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த இருதரப்பு கடற்படை கூட்டுபயிற்சிகள் ஜிமெக்ஸ் என்ற பெயரில் 2012 முதல் நடைபெற்று வருகின்றன, இது கடல்சார் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த வருடம் ஜிமெக்ஸ் பயிற்சியானது அரபிக்கடல் பகுதியில் இதே மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற உள்ளது என்பது […]

Read More

அமெரிக்க கடற்படையை உலுக்கியுள்ள சர்வதேச அளவிலான ஊழல் !!

October 6, 2021

அமெரிக்க கடற்படையின் கப்பல்களுக்கான துறைமுக சேவைக்கான ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள சர்வதேச அளவிலான ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் செல்லும் துறைமுகங்களில் சேவைகள் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஃப்ராங்க் ராஃப்பரேஸி மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல கடற்படையினர் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க […]

Read More

ரஃபேல் விமானத்தில் அதிநவீன ஸ்டெல்த் ஏவுகணையை காட்சிபடுத்திய இந்திய விமானப்படை !!

October 6, 2021

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது அதில் சு30, ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன. அப்போது ரஃபேல் விமானத்தை எடுத்த புகைப்படங்கள் இந்திய விமானப்படையால் தங்களது அதிகாரப்பூர்வ பக்கங்களில் பகிரப்பட்டு உள்ளன. அவற்றில் ரஃபேல் விமானத்தில் பொருத்தபட்டு இருந்த மைகா மற்றும் ஸ்கால்ப் அல்லது ஸ்டார்ம்ஷேடோ ஸ்டெல்த் ஏவுகணை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Read More

இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

October 6, 2021

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் பேசுகையில் இந்தியா இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார். அதாவது ராணுவம் சார்ந்த தேவைகள் மற்றும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையிலான இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களை அவர் குறிப்பிட்டு பேசினார். மேலும் பேசுகையில் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளதாகவும், இந்தியா அந்த வகையில் எதிர்காலத்துக்கு உரிய நானோ தொழில்நுட்பம், க்வாண்டம் கணிணியியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் […]

Read More

ஆக்கஸில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறாது அமெரிக்கா !!

October 6, 2021

சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ஆக்கஸ் கூட்டணியில் இந்தியா அல்லது ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறுமா என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜென் சாகி ஆக்கஸ் என்பது முத்தரப்பு ஒப்பந்தம் ஆகும் ஆகவே இதில் வேறு எந்த நாடுகளும் சேர்க்கப்படாது என்றார்.

Read More

நம்பிக்கையின்மை அதிகரிப்பு மற்றொரு கசப்பான பனிக்காலத்தை எதிர்நோக்கி செல்லும் இந்தியா மற்றும் சீனா !!

October 6, 2021

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கிழக்கு லடாக்கின் முன்னனி பகுதிகளில் இந்திய மற்றும் சீன படைகள் கடும் பனிக்காலத்தில் குவிக்கப்பட உள்ளன. அதிகரிக்கும் இந்த படை குவிப்புகள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான நம்பிக்கையின்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தெம்சாங் தெப்சாங் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரீங்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த முறை அதிக அளவில் படைகள் குவிக்கப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திய படைகளும் தங்களது இருப்பை பலப்படுத்தி உள்ளதால் வழக்கமாக ரோந்து முடித்து […]

Read More