
இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் கடற்படைகள் இடையே ஐந்தாவது இருதரப்பு கடற்படை கூட்டு பயிற்சிகளுக்கான அறிவிப்பு பாதுகாப்பு அமைசகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த இருதரப்பு கடற்படை கூட்டுபயிற்சிகள் ஜிமெக்ஸ் என்ற பெயரில் 2012 முதல் நடைபெற்று வருகின்றன, இது கடல்சார் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.
இந்த வருடம் ஜிமெக்ஸ் பயிற்சியானது அரபிக்கடல் பகுதியில் இதே மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2020ஆம் ஆண்டில் அதாவது கடந்த வருடம் இந்த பயிற்சி நடைபெற்றது என்பது கூடுதல் தகவல் ஆகும்.