
நேற்று இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பிறகு இந்திய விமானப்படை தளபதி பேட்டி அளித்தார்.
அப்போது இந்திய விமானப்படைக்கு சுமார் 114 மல்டிரோல் அதாவது பலதிறன் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வாங்க திட்டமிட்டு உள்ளதாகவும்,
இதற்கான போட்டியில் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-21 மற்றும் போயிங் எஃப்/ஏ-18, ஃபிரான்ஸின் டஸ்ஸால்ட் ரஃபேல், யூரோஃபைட்டர் டைஃபூன், ரஷ்ய மிக்-35 மற்றும் சுவீடனின் சாப் க்ரைப்பன் ஆகியவை உள்ளதாகவும் கூறினார்.
இதில் ரஃபேலுக்கு அதிக வாய்ப்புள்ளது, ஏற்கனவே நாம் எஃப்3ஆர் ரக ரஃபேலை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த முறை இருப்பதிலேயே நவீனமான எஃப்4 ரகத்தை பெற திட்டமுள்ளது.