பிரம்மாஸ் ஏவுகணையின் வரவால் உற்சாகமடைந்துள்ள ஃபிலிப்பைன்ஸ் ராணுவம் !!
1 min read

பிரம்மாஸ் ஏவுகணையின் வரவால் உற்சாகமடைந்துள்ள ஃபிலிப்பைன்ஸ் ராணுவம் !!

சர்வதேச பாதுகாப்பு நிபுணர் ஜோசேஃபஸ் ஜிமெனெஸ் இந்தியா ஃபிலிப்பைன்ஸிற்கு ஏற்றுமதி செய்துள்ள பிரம்மாஸ் ஏவுகணைகளின் வரவால் ஃபிலிப்பைன்ஸ் ராணுவம் உற்சாகமடைந்துள்ளதாக கூறியுள்ளார், இந்த ஏற்றுமதி சீனாவுக்கு மிக கடுமையான எச்சரிக்கையை அளிப்பதாகவும் மேற்கு ஃபிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் இதன் காரணமாக களநிலவரம் சூடுபிடித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் பிரம்மாஸ் அந்த பகுதியில் உலவும் சீன போர் கப்பல்களுக்கு எதிரான பிரதான தடுப்பு ஆயுதமாக விளங்கும் எனவும் ஃபிலிப்பைன்ஸ் இனியும் தனித்து விடப்படவில்லை காரணம் இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக உள்ளதாகவும் அமெரிக்கா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது எனவும்

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலமாக இந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ஃபிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் ராணுவ ரீதியான செயல்பாடுகளை மட்டும் நம்பியிருக்க கூடாது ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

எது எப்படியோ சக்திவாய்ந்த பிரம்மாஸ் ஏவுகணைகளின் வருகை அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பல அளவீட்டை அப்படியே அடியோடு மாற்றியமைத்து உள்ளது என்றால் மிகையாகாது.