அதிகரிக்கும் சீன தொந்தரவு புதிதாக 10,000 வீரர்களை படையில் சேர்க்க ITBP திட்டம் !!

  • Tamil Defense
  • October 6, 2021
  • Comments Off on அதிகரிக்கும் சீன தொந்தரவு புதிதாக 10,000 வீரர்களை படையில் சேர்க்க ITBP திட்டம் !!

தொடர்ந்து எல்லையோரம் சீன தொந்தரவு மற்றும் அடாவடிகள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக சுமார் 10,000 புதிய வீரர்களை படையில் சேர்க்க ITBP விரும்புகிறது.

இந்திய சீன எல்லையை பாதுகாப்பதிலும் கண்காணிப்பதிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் புதிதாக 47 எல்லை காவல் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும்,

ஒவ்வொரு எல்லை காவல்சாவடியிலும் சுமார் 180 வீரர்கள் காவல்பணியில் இருப்பர் மேலும் துருப்புகளுக்கு சப்ளைகள் வழங்குள் 12 மையங்கள் அமைக்கபட உள்ளன.

ஆகவே இவற்றில் பணியமர்த்த 10,000 வீரர்கள் அதாவது 1 பட்டாலியனுக்கு 1000 வீரர்கள் வீதம் 10 புதிய பட்டாலியன்களை உருவாக்க இந்தோ திபெத் எல்லை காவல்படை திட்டமிட்டு உள்ளது.

ஆனால் இந்த திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளதாகவும் இன்னும் இதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.