நம்பிக்கையின்மை அதிகரிப்பு மற்றொரு கசப்பான பனிக்காலத்தை எதிர்நோக்கி செல்லும் இந்தியா மற்றும் சீனா !!

  • Tamil Defense
  • October 6, 2021
  • Comments Off on நம்பிக்கையின்மை அதிகரிப்பு மற்றொரு கசப்பான பனிக்காலத்தை எதிர்நோக்கி செல்லும் இந்தியா மற்றும் சீனா !!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கிழக்கு லடாக்கின் முன்னனி பகுதிகளில் இந்திய மற்றும் சீன படைகள் கடும் பனிக்காலத்தில் குவிக்கப்பட உள்ளன.

அதிகரிக்கும் இந்த படை குவிப்புகள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள மிக தீவிரமான நம்பிக்கையின்மையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தெம்சாங் தெப்சாங் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரீங்ஸ் ஆகிய பகுதிகளில் இந்த முறை அதிக அளவில் படைகள் குவிக்கப்பட உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய படைகளும் தங்களது இருப்பை பலப்படுத்தி உள்ளதால் வழக்கமாக ரோந்து முடித்து தங்களது நிலைகளுக்கு திரும்பும் சீன துருப்புகள் தற்போது களத்திலேயே பனிக்காலத்தை கழிக்க வேண்டி உள்ளது.

இது இத்தகைய கடினமான சூழல்களை கையாள பழக்கப்பட்ட இந்திய துருப்புகளை விட சீன படையினருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.