மூன்றாம் உலக போர் எந்நேரமும் வெடிக்கலாம் சீனா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • October 6, 2021
  • Comments Off on மூன்றாம் உலக போர் எந்நேரமும் வெடிக்கலாம் சீனா எச்சரிக்கை !!

சீனா எந்நேரமும் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது, சமீபத்தில் தைவான் நாட்டு வான்பரப்பில் டஜன் கணக்கான சீன போர் விமானங்கள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

சீன அரசின் ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை ஒன்றில் அமெரிக்கா மற்றும் தைவான் இடையிலான நெருக்கம் எல்லை மீறி சென்று விட்டதாகவும்,

சீன மக்கள் தைவானுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் அமெரிக்காவுடனான போரில் சீன அரசுக்கு பக்கபலமாக இருந்து முழு ஆதரவு அளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதலாக 152 சீன போர் விமானங்கள் தைவான் வான் பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளன அதில் திங்கட்கிழமை அன்று மட்டுமே சுமார் 56 விமானங்கள் அத்துமீறி உள்ளன இது வரலாற்றில் இதுவயை இல்லாத சீன ஆக்ரோஷத்தை காட்டுகிறது.

அதே நேரத்தில் பிரிட்டன் கடற்படையின் குயின் எலிசபெத், ஜப்பானுடைய இசே, அமெரிக்காவின் கார்ல் வின்சன் மற்றும் ரோனால்ட் ரேகன் ஆகிய விமானந்தாங்கி கப்பல்கள் ஃபிலிப்பைன்ஸ் கடலில் கூட்டு பயிற்சிகளில் உள்ளன.