இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் பேசுகையில் இந்தியா இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அதாவது ராணுவம் சார்ந்த தேவைகள் மற்றும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையிலான இரு பயன்பாட்டு தொழில்நுட்பங்களை அவர் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் பேசுகையில் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சிக்கல்கள் காரணமாக அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளதாகவும்,

இந்தியா அந்த வகையில் எதிர்காலத்துக்கு உரிய நானோ தொழில்நுட்பம், க்வாண்டம் கணிணியியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மேலும் உள்நாட்டு ராணுவ தொழிற்சாலை அமைப்பை வலுப்படுத்த வேண்டும் அந்த வகையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அதிக முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் கூறினார்.