அமெரிக்க கடற்படையை உலுக்கியுள்ள சர்வதேச அளவிலான ஊழல் !!

அமெரிக்க கடற்படையின் கப்பல்களுக்கான துறைமுக சேவைக்கான ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள சர்வதேச அளவிலான ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் செல்லும் துறைமுகங்களில் சேவைகள் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஃப்ராங்க் ராஃப்பரேஸி மற்றும் மூத்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பல கடற்படையினர் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் தனது பங்கை ஒப்பு கொண்டுள்ளதாகவும்

ஃப்ராங்க் ரஃபரெஸியை மால்டா நாட்டில் இருந்து நாடு கடத்தி அமெரிக்கா கொண்டு வந்து விசாரிக்கவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஊழலில் அட்மிரல் அந்தஸ்து கொண்டு மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 200 கடற்படையினருக்கு தொடர்பு உள்ளதாகவும் உண்மைக்கு புறம்பாக கணக்கை அதிகமாக காண்பித்து பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.