Day: July 27, 2020

பாக் அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி; ஒரு பாக் வீரர் வீழ்த்தப்பட்டார்

July 27, 2020

பாக் அத்துமீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள் ஒரு பாக் வீரரை வீழ்த்தியுள்ளனர் மற்றும் இந்திய வீரர்கள் பதிலடியில் எட்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாக் இராணுவம் இன்று ஹஜிபீர்,பூஞ்ச்,சம்ப்,மற்றும் ராஹ் சிக்ரி செக்டார்களில் தாக்குதல் நடத்தியது.பூஞ்ச் செக்டாரில் இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் ஐந்து பாக் வீரர்கள் காயமடைந்தனர்.

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்

July 27, 2020

ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள் இந்தியா நோக்கி வரும் ஐந்து புதிய ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வரும் புதன் அன்று ஐந்து விமானங்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தப்ரா தளத்தில் ஐந்து விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக விமானப்படையும் உறுதி படுத்தியுள்ளது. இந்தியா வந்த பிறகு இந்த ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் […]

Read More

சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட சீனா

July 27, 2020

ஹீஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து சீனாவின் செங்டுவில் இருந்த அமெரிக்க தூதரகத்தை மூட முடிவு செய்தது சீனா. அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு இது தங்களின் பதிலடி என சீன வெளியுறவு அமைச்சம் பதிலளித்துள்ளது.குவாங்சோ,ஷாங்காய்,சென்யாங் ,செங்டு மற்றும் வுகான் என சீனாவில் ஐந்து தூதரகங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. எதற்கு செங்டு தேர்ந்தெடுக்கப்பட்டது ? கொரானா வைரஸ் காரணமாக ஏற்கனவே வுகான் தூதரகத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால் அதை மூடினால் அது சரியான பதிலடியாக இருக்காது […]

Read More

சிஆர்பிஎப் படை 82வது தொடக்க தினம் இன்று

July 27, 2020

மத்திய ஆயுதம் தாங்கிய படை (CAPF) பிரிவுகளில் மிகப் பெரிய படை தான்  இந்த சிஆர்பிஎப்  (CRPF) படை. எண்ணிக்கையில் பல நாட்டு முன்னனி இராணுவத்தை விட மிகப் பெரிய படை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் வீரர்கள் கொண்டு இந்தியாவின் உள்நாட்டு அமைதியை செவ்வனே காக்கும் சிறந்த படை தங்களுக்கென்றே தனிச்சிறப்பான கமாண்டாே பிரிவைக் கொண்டது.காட்டுப்பகுதி போர்முறையில் சிறந்த போர்வீரர்கள் படை என மெச்சும் கோப்ரா படை தான் அந்த கமாண்டாே படை. சேவை மற்றும் நேர்மை […]

Read More

மூழ்கிய மீன்பிடி படகில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட கடற்படை !!

July 27, 2020

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே உள்ள மணலி தீவுக்கு அருகே மீன்படி படகு கவிழ்ந்துள்ளதாக தகவல் கிட்டவே, ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் இருந்து இந்திய கடற்படை சேட்டக் ஹெலிகாப்டர் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டது. ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து சுமார் 8 நாட்டிகல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகு கண்டுபிடிக்க பட்டது. இதனையடுத்து இரண்டு தொகுதிகளாக படகில் இருந்த மீனவர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் தளத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டனர்.

Read More

எல்லைகளை கண்காணிக்கும் இந்தியாவின் எமிசாட் செயற்கைகோள் பற்றிய சிறு கட்டுரை !!

July 27, 2020

எமிசாட் (EMISAT) இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் தகவல் கண்காணிப்பு செயற்கைகோள் ஆகும், இதனை நமது இஸ்ரோ மற்றும் DRDO ஆகியவை இணைந்து தயாரித்தன. இந்த செயற்கைகோள் சுமார் 748 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது, 436 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளில் கவுதில்யா என்ற கருவியும் உள்ளது. இந்த கவுதில்யா ஒரு எலக்ட்ரானிக் சிக்னல் கண்காணிப்பு மற்றும் இடைமறித்தல் கருவியாகும், எதிரி படையினரின் எலக்ட்ரானிக் தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து தகவல் திரட்ட உதவும் […]

Read More

நரகம் மேலிருந்து விழுகிறது; அலறிய பாகிஸ்தான் வீரர்கள், சுவாரஸ்யமான கதை !!

July 27, 2020

மேஜர் ஜெனரல் லாக்வீந்தர் சிங் (ஒய்வு), இவர் 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் சேவை புரிந்தவர்களில் ஒருவர், இவரது சாமர்த்தியமான திட்டமிடல் பாகிஸ்தானியர்களை குலை நடுங்க வைத்தது. கார்கில் போரின் போது பிரிகேடியராக பதவி வகித்த அவர், எதிரி நிலைகளை தாக்கும் ஆர்ட்டில்லரி பிரிகேடிற்கு தலைமை தாங்கினார். போரின் ஆரம்ப காலத்தில் இந்திய தரைப்படையின் கிலாட்படை அதிக இழப்புகளை சந்ததித்தது, வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆழ்ந்து யோசித்த பிரிகேடியர் லாக்வீந்தர் சிங், பண்டைய காலங்களில் […]

Read More

அரசுப்பணி எனும் பளபளப்பான மாயை; ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்த கட்டுரை !!

July 27, 2020

பொதுவாக நமது நாட்டில் ராணுவ பணியின் தன்மை, அதில் உள்ள சிக்கல்கள், வீரர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை பற்றிய போதுமான விழிப்புணர்வு நாட்டு மக்களிடமோ, ஏன் ராணுவ வீரர்களிடமோ கூட இருப்பதில்லை, அதாவது தனக்கு தன்னை அறியாமல் ஏற்படும் பாதிப்பை பற்றிய புரிதல் கூட இருப்பதில்லை, ஆகவே இந்த கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்திய தரைப்படை நாட்டின் பரந்த பலதரப்பட்ட பல்வேறு காலநிலைகள் நிலவும் எல்லை பகுதிகளை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது, ஆகவே […]

Read More

அடுத்தகட்டமாக சுமார் 47 சீன செயலிகள் தடை இந்திய அரசு உத்தரவு !!

July 27, 2020

சில நாட்களுக்கு முன்னர் இந்திய அரசு சுமார் 59 சீன செயலிகளை தகவல் திருட்டு மற்றும் தேச பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக தடை செய்தது. இதனையடுத்து இன்று சுமார் 47 சீன செயலிகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த சீன செயலிகளில் ஷேர் இட் லைட், பிகோ லைட் ஆகியவையும் அடங்கும், முதலில் தடை செய்யப்பட்ட 59 செயலிகளுடன் இவற்றிற்கு தொடர்பு உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு இத்தகைய 47 […]

Read More

சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் சீனா போர் ஒத்திகை !!

July 27, 2020

சீன ராணுவம் தென்சீன கடல் பகுதியை ஒட்டியுள்ள லெய்ஷூவோ பகுதியில் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகைகளை துவங்கி உள்ளது. ஒரு வார காலம் நடைபெறும் இப்பயிற்சியில் விமான எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீன ராணுவமா சோதித்து பார்க்க உள்ளது. சீன ராணுவத்தின் ராக்கெட் படையினரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர், தங்களது பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு க்ருஸ் ஏவுகணைகளை வைத்து பயிற்சி மேற்கொள்கின்றனர். மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் அனைத்துமே சுமார் 300 – […]

Read More