மூழ்கிய மீன்பிடி படகில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட கடற்படை !!

  • Tamil Defense
  • July 27, 2020
  • Comments Off on மூழ்கிய மீன்பிடி படகில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட கடற்படை !!

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் அருகே உள்ள மணலி தீவுக்கு அருகே மீன்படி படகு கவிழ்ந்துள்ளதாக தகவல் கிட்டவே,

ஐ.என்.எஸ். பருந்து கடற்படை தளத்தில் இருந்து இந்திய கடற்படை சேட்டக் ஹெலிகாப்டர் தேடுதல் பணிக்கு அனுப்பப்பட்டது.

ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து சுமார் 8 நாட்டிகல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான படகு கண்டுபிடிக்க பட்டது.

இதனையடுத்து இரண்டு தொகுதிகளாக படகில் இருந்த மீனவர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் தளத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டனர்.