நரகம் மேலிருந்து விழுகிறது; அலறிய பாகிஸ்தான் வீரர்கள், சுவாரஸ்யமான கதை !!

மேஜர் ஜெனரல் லாக்வீந்தர் சிங் (ஒய்வு), இவர் 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் சேவை புரிந்தவர்களில் ஒருவர், இவரது சாமர்த்தியமான திட்டமிடல் பாகிஸ்தானியர்களை குலை நடுங்க வைத்தது.

கார்கில் போரின் போது பிரிகேடியராக பதவி வகித்த அவர், எதிரி நிலைகளை தாக்கும் ஆர்ட்டில்லரி பிரிகேடிற்கு தலைமை தாங்கினார்.

போரின் ஆரம்ப காலத்தில் இந்திய தரைப்படையின் கிலாட்படை அதிக இழப்புகளை சந்ததித்தது, வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

ஆழ்ந்து யோசித்த பிரிகேடியர் லாக்வீந்தர் சிங், பண்டைய காலங்களில் போர்களில் பயன்படுத்தபட்ட யுக்தியை சிறிது மாற்றியமைத்து பயன்படுத்த எண்ணினார்.

அதாவது சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங் போன்றோர் பிரங்கிகளை எதிரி படையினரை நோக்கி வைத்து நேரடியாக தாக்குதல் நடத்தினர், இதன் காரணமாக எதிரி படையினர் சரியாக செயல்பட முடியாமல் தோல்வியை தழுவினர்.

அதே யுக்தியை சிறிது மாற்றி அமைத்து மலை முகடுகளில் பதுங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை துவம்சம் செய்ய முடிவு செய்தார்.

முதல் கட்டமாக டோலோலிங் மலையை கைபற்றும் சண்டையின் போது ஒரு பேட்டரி போஃபர்ஸ் பிரங்கிகளை கொண்டு மலை முகட்டில் இருந்த பாகிஸ்தான் நிலைகளை துல்லியமாக ஆனால் சரமாரியாக தாக்கினார், இந்த தாக்குதலிலேயே பாகிஸ்தான் வீரர்கள் துவம்சம் செய்யபட்டனர், காலாட்படை சுலபமாக முன்னேறி மலையை கைபற்றியது.

அதன் பிறகு சுமார் 100 போஃபர்ஸ் பிரங்கிகளை வரிசையாக நிறுத்திவிட்டு அடுத்தடுத்த சண்டைகளில் பாகிஸ்தான் நிலைகளை தரை மட்டமாக்கினார்.

பொதுவாக பிரங்கி தாக்குதல் நடைபெறும் இடத்திற்கு 300மீ தள்ளி பாதுகாப்பான தூரத்தில் தான் காலாட்படையினர் இருப்பர் தாக்குதல் ஒய்ந்த பின்னர் தான் முன்னேறுவர்.

ஆனால் நமது பிரங்கி படையினரின் துல்லியமான தாக்குதல் காலாட்படையகனருக்கு அதிக தைரியத்தை கொடுத்தது, தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து சுமார் 50மீ தொலைவு வரை நமது வீரர்கள் சென்றனர்.

இத்தகைய தொடர்ச்சியான, துல்லியமான, குவிக்கப்பட்ட தாக்குதல்களால் பாகிஸ்தான் படையினர் நிலை குலைந்தனர், ஒரு முறை பாகிஸ்தான் தகவல் பரிமாற்றத்தை இடை மறித்த போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களது மூத்த அதிகாரிகளிடம் “நரகமே மேலிருந்து விழுவது போல் உள்ளது” என கதறி உள்ளனர்.

அவ்வளவு தீவிரமான ஆக்ரோஷமான துல்லியமான தாக்குதல்களை நடத்த திட்டம் வகுத்து நாட்டின் வெற்றிக்கு சத்தமில்லாமல் பங்காற்றினார் மேஜர் ஜெனரல் லாக்வீந்தர் சிங்.