
எமிசாட் (EMISAT) இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக் தகவல் கண்காணிப்பு செயற்கைகோள் ஆகும், இதனை நமது இஸ்ரோ மற்றும் DRDO ஆகியவை இணைந்து தயாரித்தன.
இந்த செயற்கைகோள் சுமார் 748 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது, 436 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளில் கவுதில்யா என்ற கருவியும் உள்ளது.
இந்த கவுதில்யா ஒரு எலக்ட்ரானிக் சிக்னல் கண்காணிப்பு மற்றும் இடைமறித்தல் கருவியாகும், எதிரி படையினரின் எலக்ட்ரானிக் தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து தகவல் திரட்ட உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைகோள் தற்போதைய சீனாவுடனான எல்லை பிரச்சிணையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
சீன ராணுவத்தினரின் நடமாட்டங்களை கண்காணிக்க அவர்களின் முகாம்களுக்கு மேலே சென்று கண்காணிப்பு மற்றும் இடைமறித்தல் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.