ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கிய ரபேல் விமானங்கள்
இந்தியா நோக்கி வரும் ஐந்து புதிய ரபேல் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வரும் புதன் அன்று ஐந்து விமானங்களும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தப்ரா தளத்தில் ஐந்து விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக விமானப்படையும் உறுதி படுத்தியுள்ளது.
இந்தியா வந்த பிறகு இந்த ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற உள்ள விழாவில் படையில் இணையும்.
ரபேல் விமானத்தின் வருகை நமது விமானப்படைக்கு ஒரு புதுவித ரத்தத்தை பாய்ச்ச உள்ளது.