சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட சீனா

ஹீஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து சீனாவின் செங்டுவில் இருந்த அமெரிக்க தூதரகத்தை மூட முடிவு செய்தது சீனா.

அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு இது தங்களின் பதிலடி என சீன வெளியுறவு அமைச்சம் பதிலளித்துள்ளது.குவாங்சோ,ஷாங்காய்,சென்யாங் ,செங்டு மற்றும் வுகான் என சீனாவில் ஐந்து தூதரகங்களை அமெரிக்கா கொண்டுள்ளது.

எதற்கு செங்டு தேர்ந்தெடுக்கப்பட்டது ?

கொரானா வைரஸ் காரணமாக ஏற்கனவே வுகான் தூதரகத்தின் செயல்பாடுகள் முடங்கியுள்ளதால் அதை மூடினால் அது சரியான பதிலடியாக இருக்காது என சீனா நினைத்துள்ளது.

ஹாங்காங்கில் உள்ள தூதரகத்தை மூடினால் நிலைமை கண்டிப்பாக மிக மோசமாகும் என சீனா அறிந்துள்ளது.செங்டு தூதரகம் திபத்துடன் நெருங்கிய உறவு கொண்டுள்ளது.செங்டு தூதரகம் ஏற்கனவே சீனாவின் உள்நாட்டு விசயங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டை சீனா முன்வைத்திருந்தது.

எனவே இதை மூடுவது சரியான பதிலடியாக இருக்கும் என சீனா மூடிவிட்டது.