
சீன ராணுவம் தென்சீன கடல் பகுதியை ஒட்டியுள்ள லெய்ஷூவோ பகுதியில் மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகைகளை துவங்கி உள்ளது.
ஒரு வார காலம் நடைபெறும் இப்பயிற்சியில் விமான எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீன ராணுவமா சோதித்து பார்க்க உள்ளது.
சீன ராணுவத்தின் ராக்கெட் படையினரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர், தங்களது பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு க்ருஸ் ஏவுகணைகளை வைத்து பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட ஏவுகணைகள் அனைத்துமே சுமார் 300 – 400 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று எதிரி கப்பல்களை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.