Breaking News

Day: January 15, 2021

சீனாவின் JF17ஐ விட தேஜாஸ் நவீனமானது: விமானப்படை தளபதி

January 15, 2021

சமீபத்தில் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா அவர்களிடம் பேட்டி ஒன்றில் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்,நிருபரின் கேள்வி : நமது தேஜாஸ் விமானம் மற்றும் சீனாவின் JF17 ஆகியவற்றை ஒப்பீடு செய்தால் எது நவீனமானது ?? விமானப்படை தளபதியின் பதில்: நமது தேஜாஸ் விமானம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது, நிச்சயமாக JF17ஐ விட தேஜாஸ் சிறப்பானது என்றார்.JF17 பாகிஸ்தான் மற்றும் சீனாவால் கூட்டாக தயாரிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கல்யாணி குழுமத்தின் புதிய கவச வாகனம் !!

January 15, 2021

கல்யாணி குழுமம் புதிய கவச வாகனம் ஒன்றை உருவாக்கி உள்ளது, அதன் சிறப்பம்சங்களை காணலாம். கல்யாணி மேவ்ரிக் கவச வாகனம். அதிகபட்ச வேகம் : மணிக்கு 110கிமீ பயணிகள்: 11 வீரர்கள் மூன்றாவது கட்ட பலிஸ்டிக் பாதுகாப்பு 50கிலோ டி.என்.டி குண்டு வெடித்தாலும் உள்ளே ஆபத்து இருக்காது.6 சிலின்டர் என்ஜின் கொண்ட இது கரடு முரடான நிலப்பரப்பிலும் அசாத்திதயமாக பயணிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விரைவில் அமேதியில் ஏகே203 துப்பாக்கி தொழிற்சாலை, 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிப்பு !!

January 15, 2021

தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே விரைவில் AK-203 துப்பாக்கி தயாரிப்புக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றார். மேலும் சுமார் 6,71,427 துப்பாக்கிகளும் 100% தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றார். ஒரு ஏகே203 துப்பாக்கியின் விலை சுமார் 70,000 ருபாய் மேலும் ஒரு துப்பாக்கிக்கு 6000 ருபாய் வீதம் ரஷ்யாவுக்கு லாபம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியமும் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்தியா வரும் புதிய பிரித்தானிய அதிநவீன “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பு !!

January 15, 2021

இந்தியாவின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் தேல்ஸ் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி தேல்ஸ் நிறுவனத்தின் “ஸ்டார் ஸ்ட்ரீக்” வான் பாதுகாப்பு அமைப்பை 60% இந்தியாவில் தயாரிக்க உள்ளனர். மேலும் இது இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளின் குறுந்தூர வான் பாதுகாப்பு அமைப்புக்கான தேவைகளை சந்திக்கும். இந்த ஸ்டார் ஸ்ட்ரீக் ஏவுகணை சுமார் 4 மாக் அதாவது மணிக்கு 1300கிமீக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது, இது உலகிலேயே அதிவேகமான […]

Read More