விரைவில் அமேதியில் ஏகே203 துப்பாக்கி தொழிற்சாலை, 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிப்பு !!

  • Tamil Defense
  • January 15, 2021
  • Comments Off on விரைவில் அமேதியில் ஏகே203 துப்பாக்கி தொழிற்சாலை, 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிப்பு !!

தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே விரைவில் AK-203 துப்பாக்கி தயாரிப்புக்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்றார்.

மேலும் சுமார் 6,71,427 துப்பாக்கிகளும் 100% தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரிக்கப்படும் என்றார்.

ஒரு ஏகே203 துப்பாக்கியின் விலை சுமார் 70,000 ருபாய் மேலும் ஒரு துப்பாக்கிக்கு 6000 ருபாய் வீதம் ரஷ்யாவுக்கு லாபம் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது ஆயுத தொழிற்சாலைகள் வாரியமும் ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.