Day: January 9, 2021

எல்லை தாண்டிய பாக் சிறுவன்-பத்திரமாக அனுப்பி வைத்த இராணுவம்

January 9, 2021

எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக் சிறுவனை இந்திய இராணுவம் பத்திரமாக மீட்டு திருப்பி அனுப்பியுள்ளது. பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது நிரம்பிய சிறுவன் அலி ஹைதர்.அவன் கடந்த டிசம்பர் 31 அன்று தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான். பூஞ்சில் உள்ள எல்லைக்கோடு வழியாக இவன் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான். அவனை தற்போது இராணுவ வீரர்கள் பரிசுப் பொருள்கள் கொடுத்து பத்திரமாக பாக் இராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.

Read More

பாக்கிற்கு உளவு பார்த்த முன்னாள் இராணுவ வீரர்-கைது செய்த பாதுகாப்பு படை

January 9, 2021

பாக்கின் உளவு நிறுவனத்திற்கு முக்கியமாக தகவல்களை பகிர்ந்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கராச்சியில் உள்ள ஒருவருக்கு முன்னாள் இராணுவ வீரர் சௌரப் சர்மா என்பவர் முக்கியத் தகவல்கள் அனுப்புவதாக லக்னோவில் உள்ள இராணுவ உளவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் ஆபரேசன் க்ராஸ் கனெக்சன் என்னும் பெயரில் அவரை இராணுவ உளவுப் பிரிவு கண்காணிக்க தொடங்கியுள்ளது.கடந்த நான்கு வருடங்களாக அவர் பாக் உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீன் […]

Read More

தேசப்பாதுகாப்பே முக்கியம் எஸ்-400 விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி

January 9, 2021

தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமையும் என அமெரிக்காவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் கூறியுள்ளது.ஏற்கனவே இரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பெறுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உலக அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உறவு நிலவுகிறது.இரஷ்யா இந்தியா இடையே அதே போல ஒரு சிறப்பு உறவு நிலவுகிறது.இந்தியா ஆயுதங்கள் இறக்குமதி செய்வது தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டே அமையும் என வெளியுறவு அமைச்சக செய்தி […]

Read More

கொரானா மருந்தை நாடு முழுதும் அனுப்ப தயாராகும் விமானப்படை

January 9, 2021

கொரானா மருந்துகளை நாடு முழுதும் வழங்க இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு உதவ இந்திய விமானப்படை தயாராக உள்ளது.இதற்காக 100 விமானங்கள் தயாராக உள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளுக்கு கொரானா மருந்தை வான் வழியாக கொண்டு செல்ல மூன்று ரக விமானங்களை விமானப்படை குறித்து வைத்துள்ளது.நாடு முழுதும் உள்ள 28000 குளிரூட்டப்பட்ட சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை விமானப்படையின் சி-17,சி-130 மற்றும் IL 76 விமானங்கள் கொண்டு செல்லும்.சிறிய மையங்களுக்கு AN-32 மற்றும் டோர்னியர் […]

Read More