கொரானா மருந்தை நாடு முழுதும் அனுப்ப தயாராகும் விமானப்படை

  • Tamil Defense
  • January 9, 2021
  • Comments Off on கொரானா மருந்தை நாடு முழுதும் அனுப்ப தயாராகும் விமானப்படை

கொரானா மருந்துகளை நாடு முழுதும் வழங்க இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் அதற்கு உதவ இந்திய விமானப்படை தயாராக உள்ளது.இதற்காக 100 விமானங்கள் தயாராக உள்ளது.

நாட்டின் மூலை முடுக்குகளுக்கு கொரானா மருந்தை வான் வழியாக கொண்டு செல்ல மூன்று ரக விமானங்களை விமானப்படை குறித்து வைத்துள்ளது.நாடு முழுதும் உள்ள 28000 குளிரூட்டப்பட்ட சேமிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை விமானப்படையின் சி-17,சி-130 மற்றும் IL 76 விமானங்கள் கொண்டு செல்லும்.சிறிய மையங்களுக்கு AN-32 மற்றும் டோர்னியர் விமானங்கள் கொண்டு செல்லும்.கடைசி கட்டஇடங்களுக்கு செல்ல த்ருவ்,சீட்டா மற்றும் சின்னூக் வானூர்திகள் பயன்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 30 கோடி இந்தியர்களுக்கு கொரானா தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளது.அதிலும் குறிப்பாக ஒரு கோடி முன்களப்பணியார்கள் மற்றும் மெடிக்கல் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்.
இதற்காக பாதுகாப்பு அமைச்சகம்,உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இணைந்து திட்டங்கள் வகுத்து வருகிறது.

இந்திய விமானப்படை இது போல நாட்டிற்கு கடின காலத்தில் உதவி செய்வது முதல் முறையல்ல.பணமதிப்பிழப்பின் போது புதிய ரூபாய் நோட்டுக்களை நாடு முழுதும் அனுப்ப விமானப்படை உதவியது.

பல கோடிகள் கொடுத்து எதற்கு விமானங்கள் வாங்கப்படுகின்றன என பல முறை சிலர் கூறக்கேட்டதுண்டு நான்….இனிமேலாவது புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்..