எல்லை தாண்டிய பாக் சிறுவன்-பத்திரமாக அனுப்பி வைத்த இராணுவம்

  • Tamil Defense
  • January 9, 2021
  • Comments Off on எல்லை தாண்டிய பாக் சிறுவன்-பத்திரமாக அனுப்பி வைத்த இராணுவம்

எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக் சிறுவனை இந்திய இராணுவம் பத்திரமாக மீட்டு திருப்பி அனுப்பியுள்ளது.

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது நிரம்பிய சிறுவன் அலி ஹைதர்.அவன் கடந்த டிசம்பர் 31 அன்று தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்.

பூஞ்சில் உள்ள எல்லைக்கோடு வழியாக இவன் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்.

அவனை தற்போது இராணுவ வீரர்கள் பரிசுப் பொருள்கள் கொடுத்து பத்திரமாக பாக் இராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.