தேசப்பாதுகாப்பே முக்கியம் எஸ்-400 விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி

தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமையும் என அமெரிக்காவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் கூறியுள்ளது.ஏற்கனவே இரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பெறுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உலக அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த உறவு நிலவுகிறது.இரஷ்யா இந்தியா இடையே அதே போல ஒரு சிறப்பு உறவு நிலவுகிறது.இந்தியா ஆயுதங்கள் இறக்குமதி செய்வது தேசப்பாதுகாப்பை கருத்தில் கொண்டே அமையும் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த அக்டோர் 5,2019ல் சுமார் 5.43 பில்லியர் டாலர்கள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து ஐந்து எஸ்-400 அமைப்புகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.