பாக்கிற்கு உளவு பார்த்த முன்னாள் இராணுவ வீரர்-கைது செய்த பாதுகாப்பு படை

  • Tamil Defense
  • January 9, 2021
  • Comments Off on பாக்கிற்கு உளவு பார்த்த முன்னாள் இராணுவ வீரர்-கைது செய்த பாதுகாப்பு படை

பாக்கின் உளவு நிறுவனத்திற்கு முக்கியமாக தகவல்களை பகிர்ந்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சியில் உள்ள ஒருவருக்கு முன்னாள் இராணுவ வீரர் சௌரப் சர்மா என்பவர் முக்கியத் தகவல்கள் அனுப்புவதாக லக்னோவில் உள்ள இராணுவ உளவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பின் ஆபரேசன் க்ராஸ் கனெக்சன் என்னும் பெயரில் அவரை இராணுவ உளவுப் பிரிவு கண்காணிக்க தொடங்கியுள்ளது.கடந்த நான்கு வருடங்களாக அவர் பாக் உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜீன் 2020ல் தான் இவர் மருத்துவ காரணங்களுக்காக இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இராணுவத்தில் இருந்து விலகிவிட்டாலும் இராணுவத்தில் இருந்த தனது சக வீரர்களிடம் தொடர்பில் இருந்துள்ளார்.தற்போது அவரது சொந்த ஊரில் வைத்து அவரை உபி பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது.

இதற்கு முன்பு போலவே தான் சிக்னல் மேனாக இருந்த சௌரப் அவரையும் “ஹனி ட்ராப்” செய்து வலையில் வீழ்த்தியுள்ளது பாக்கின் ஐஎஸ்ஐ.2014ல் ஒரு பெண்ணில் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது.தன்னை ஒரு பாதுகாப்பு துறை சார்ந்த செய்தியாளராக காட்டிய ஐஎஸ்ஐ ஆபரேடிவ் பின்பு ஆராய்ச்சி என்ற பெயரில் தகவல்களை கறந்துள்ளார்.சௌரப் தகவல்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.

கொடுத்த தகவல்களுக்கு பணமும் பெற்றுள்ளார் சௌரப்.தற்போது அவரது போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.