சென்னையில் போதையில் பொதுமக்களை அரை நிர்வாணமாக கடிக்க பாயந்த இங்கிலாந்து கடற்படை வீரர் !!

  • Tamil Defense
  • April 3, 2024
  • Comments Off on சென்னையில் போதையில் பொதுமக்களை அரை நிர்வாணமாக கடிக்க பாயந்த இங்கிலாந்து கடற்படை வீரர் !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு வெளிநாட்டு இளைஞர் போதை தலைக்கேறிய நிலையில் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தும் அடிக்கவும் கடிக்கவும் பாய்ந்தார் இந்த சம்பவத்தால் ராயபேட்டை பகுதியில் சற்று நேரத்திற்கு பெரும் பதட்டம் பரவியது, முதலில் இவர் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி என செய்திகள் வெளியாகின தற்போது இவர் இங்கிலாந்து கடற்படை வீரர் என தெரிய வந்துள்ளது.

அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சென்னை அருகேயுள்ள காட்டுபள்ளி பகுதியில் அமைந்துள்ள Larsen & Toubro நிறுவனத்தின் கப்பல் கட்டுமான தளத்திற்கு இங்கிலாந்து கடற்படையின் RFA Lyme Bay லைம் பே மற்றும் RFA Argus ஆர்கஸ் ஆகிய இரு கப்பல்கள் பராமரிப்பு பணிகளுக்காக வந்தன, இவை இங்கிலாந்து கடற்படை மற்றும் மரைன் படைகளுக்கு சப்ளை RFA – Royal Fleet Auxiliary எனப்படும் இங்கிலாந்து துணை கடற்படை பிரிவின் கப்பல்களாகும்.

அந்த இரண்டு கப்பல்களையும் சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நகரில் சுற்றிபார்க்க வந்தனர் அப்போது ராயபேட்டை அருகேயுள்ள மால் ஒன்றில் அவர்கள் ஷாப்பிங் செய்ய சென்றனர் அவர்களில் ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் மாலுக்கு வரும் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், சற்று நேரத்தில் அவரது சகாக்கள் அங்கு வந்து அவரை கட்டுபடுத்த முயன்றனர் ஆனாலும் அவர்களுக்கு அடங்காமல் சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஒட்டி ஒருவரை கடிக்க பாய்ந்தார் அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை கட்டுபடுத்தி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

பின்னர் அங்கு விசாரித்த போது தான் அவர் இங்கிலாந்து கடற்படை வீரர் ஜே.எல்.வில்லிஸ் என்புதம் அவரும் அவரது சகாக்கள் யார் எப்போது எதற்காக வந்தனர் என்பதும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து அவர்களை எச்சரித்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அனுப்பி விட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது தற்போது இந்த சம்பவம் இந்தியா முழுவதும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.