இஸ்ரேல் எகிப்து அதிகாரிகள் ரகசிய சந்திப்பு காசா போரின் அடுத்த கட்டம் குறித்து பேச்சுவார்த்தை !!
1 min read

இஸ்ரேல் எகிப்து அதிகாரிகள் ரகசிய சந்திப்பு காசா போரின் அடுத்த கட்டம் குறித்து பேச்சுவார்த்தை !!

கடந்த புதன்கிழமை அன்று மூத்த இஸ்ரேலிய மற்றும் எகிப்திய அதிகாரிகள் எகிப்து தலைநகர் கைரோவில் ரகசியமாக சந்தித்து காசா போரின் அடுத்த கட்டமாக காசாவின் தெற்கு முனையில் உள்ள ராஃபா நகரத்தின் மீதான இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் திட்டங்கள் பற்றி கலந்தாலோசனை மேற்கொண்டதாகவும் இதில் எகிப்திய உளவுத்துறையான GIS – General Intelligence Service ன் தலைலர் அப்பாஸ் கெமால் , எகிப்து ராணுவ தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஒசாமா அஸ்கார் மற்றும் இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான Shin Bet ன் தலைவர் ரோனென் பார் மற்றும் இஸ்ரேலிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஹெர்சி ஹாலெவி அவர்களும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு ராஃபா மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்த போகும் தாக்குதல் காரணமாக ஏற்படும் சேதம் மற்றும் அச்சம் காரணமாக பல ஆயிரம் பாலஸ்தீனியர்கள் எகிப்துக்குள் அத்துமீறி நுழையலாம் இது எகிப்து நாட்டின் தேசிய பாதுகாப்பை கேள்வி குறியாக்கி விடும் எனவும் எகிப்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை மற்றும் உளவுத்துறை இதன் காரணமாக அஞ்சுவதாகவும் மேலும் இதை தொடர்ந்து எகிப்திய அதிகாரிகள் இஸ்ரேல் ராஃபா மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் எகிப்து சமாதான ஒப்பந்தம் மற்றும் உறவுகளில் விரிசலை ஏற்பத்தி விடும் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இஸ்ரேலிய தரப்பில் எகிப்து காசா இடையேயான பிலடெல்ஃபி பாதையை கைப்பற்றுவது தான் நோக்கம் எனவும் மேலும் எகிப்துடன் ராணுவ மற்றும் ராஜதந்திர ஒருங்கிணைப்பின்படி தான் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாறாக தான் தோன்றித்தனமான தாக்குதல்களோ ராணுவ நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாது என உறுதி அளித்துள்ளதாகவும் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள கடந்த அக்டோபர் 7ஆம் தேதிக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

முந்தைய சந்திப்பு கடந்த ஃபெப்ரவரி மாதம் நடைபெற்றது அந்த சந்திப்பின் போது இஸ்ரேலிய அதிகாரிகள் எகிப்திய அதிகாரிகளிடம் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையின் காரணமாக எகிப்துக்குள் பாலஸ்தீனியர்கள் ஊடுருவும் சூழல் ஏற்படாது என உறுதி அளித்தாக கூறப்படுகிறது, கடந்த புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இரு தரப்பினரும் எகிப்து முன்மொழிந்த தற்காலிக சண்டை நிறுத்தம் மற்றும் பணய கைதிகளின் விடுதலை ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது எனினும் இருதரப்பினரும் என்னவெல்லாம் விவாதிக்கப்பட்டன என்பதை குறித்து பொதுவெளியில் ஒன்றும் பகிரவில்லை.

அதே போல் அமெரிக்காவும் ராஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மக்கள் தஞ்சம் அடைவதற்கு ஏதுவாக சில பகுதிகளில் உணவு நீர் இருப்பிட மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட பகுதிகளை ஏற்படுத்தி உள்ளன தற்போது இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவின் ஒப்புதலுக்காக இவர்கள் காத்திருப்பதாகவும் அவர் சரி என சொல்லும் சூழலில் உடனடியாக பாலஸ்தீனியர்களை இந்த பகுதிகளுக்கு கொண்டு வரும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.

மேலும் இஸ்ரேல் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அளித்துள்ள தனது ராணுவ நடவடிக்கையின் திட்டம் மக்களுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் உள்ளதாகவும் அதாவது ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்தப்படாது மாறாக ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக பிரித்து மக்களை வெளியேற்றி விட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.