சீனாவுடன் அதிகரிக்கும் பிரச்சினை இரண்டு புதிய கப்பல்கள் தைவான் கடற்படையில் இணைப்பு !!

  • Tamil Defense
  • March 28, 2024
  • Comments Off on சீனாவுடன் அதிகரிக்கும் பிரச்சினை இரண்டு புதிய கப்பல்கள் தைவான் கடற்படையில் இணைப்பு !!

நாளுக்கு நாள் சீனா உடனான பிரச்சினை பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில் தைவான் அரசு ஒரு போருக்கு தன்னை ஆயத்தப்படுத்தி கொண்டே வருகிறது.

அதன் ஒரு பகுதியாக விரைவில் பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய தைவான் அதிபர் சாய் இங் வென் தலைமையில் இரண்டு புதிய போர் கப்பல்கள் தைவான் கடற்படையில் சுவாவோ துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைக்கப்பட்டன.

இந்த இரண்டு கப்பல்களும் துவோ சியாங் ரக கார்வெட் கப்பல்களாகும் மொத்தமாக இத்தகைய ஆறு கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன, இவை மிக சிறியவை தான் ஆனால் மிக வேகமானவை மற்றும் அதிநவீன ஆயுதங்களை சுமப்பவை ஆகும்.

தைவான் தொடர்ந்து தனது கடற்படையை வலுப்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே Hai Kun ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைத்து வருகிறது மேலும் Yushan ரக ஸ்டெல்த் நீர்நில போர்முறை கப்பல்களையும் கட்டி வருகிறது.

சில நாட்கள் முன்னர் சீனாவின் மங்கோலிய பாலைவன பகுதியில் தைவான் தலைநகர் தைபேயில் அமைந்துள்ள தைவான அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சாலை கட்டமைப்பை போன்ற அமைப்பை உருவாக்கி வைத்துள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் மீதான சீனா படையெடுப்பு துவங்கும் பட்சத்தில் உடனடியாக சீன படைகள் தைவான் அதிபர் போன்ற முக்கிய தலைவர்களை கொல்லவோ கைது செய்யவோ தயாராக வேண்டி பயிற்சி மேற்கொள்வதற்காக இந்த கட்டமைப்பை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.