Breaking News

Author: Tamil Defense

காஷ்மீர் எல்லையில் குவிக்கப்படும் அதிக அளவிலான BSF படை வீரர்கள் !!

January 22, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லையோரம் எல்லை பாதுகாப்பு படை கண்காணிப்பை பலப்படுத்த அதிக அளவில் வீரர்களை குவித்துள்ளது. 200 கிலோமீட்டர் நீளம் கொண்ட சர்வதேச எல்லையோரம் அதிநவீன கண்காணிப்பு கருவிகளுடன் பனிக்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். உஜ், பஸந்தார் மற்றும் செனாப் ஆகிய ஆற்று படுகை பகுதிகளை வீரர்கள் முற்றிலும் முடக்கி உள்ளதாகவும் இரவு நேர கண்காணிப்பு பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

ரஷ்யாவின் புதிய ஒரியன் ஆளில்லா போர் விமானம்; போரின் தன்மைகளையே அடியோடு மாற்றியமைக்கும் திறன் !!

January 22, 2022

ரஷ்யாவின் க்ரோன்ஷ்டாட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய MALE ரக சுய நுண்ணறிவு ஆற்றல் கொண்ட ஒராயன் ரக ஆளில்லா சண்டை விமானங்கள் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக பாரக்கப்படுகிறது. இந்த ஆளில்லா விமானம் 7.5 கிலோமீட்டர் உயரத்தில் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கக்கூடியது இதனை தரையில் இருந்து ஒரு விமானி இயக்குவார். சுமார் 250 கிலோ அளவிலான ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட இது 4 வானிலக்கு ஏவுகணைகள் அல்லது KAB-20, KAB-50, UPAB-50 ஆகிய […]

Read More

45 நாடுகள் பங்குபெறும் இந்தியா நடத்தும் மிகப்பெரிய கடற்படை பயிற்சி !!

January 22, 2022

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மிலன் கடற்படை போர் பயிற்சிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது இதில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன. இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கடற்படை போர் பயிற்சியாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன, நேரடியாகவும் காணொளி மூலமாகவும் இதில் பங்கேற்க உள்ளனர். அடுத்த மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது, […]

Read More

சீனாவுக்கு எதிரான க்வாட் நாடுகளுடன் கனடா மற்றும் தென் கொரியா பங்கேற்ற மாபெரும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி !!

January 22, 2022

ஃபிலிப்பைன்ஸ் அருகேயுள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான க்வாம் கடற்படை தளத்தில் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர சீ ட்ராகன் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி நடைபெற்றது. இந்த போர் பயிற்சியில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பங்கேற்ற நிலையில் இது சீனாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த போர் பயிற்சிக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை P8 பொசைடான், ஜப்பான் கவாஸாகி P1, கனடா CP-140 அரோரா மற்றும் […]

Read More

அருணாச்சல் இளைஞரை கடத்திய விவகாரம்; எல்லை தாண்டினால் இப்படி தான் செய்வோம் சீனா அடாவடி !!

January 22, 2022

அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் மிராம் டாரோமை காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்ற போது சீன ராணுவத்தினர் கடத்தி உள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு துறை அமைச்சகம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என மறுப்பு தெரிவித்து விட்டு சீன மக்கள் விடுதலை ராணுவம் எல்லை பகுதிகளை சட்டத்திற்கு உட்பட்டு மதிப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் தங்களது பகுதியில் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]

Read More

சுவீடனிடம் இருந்து ஒற்றை முறை பயன்படுத்தக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் !!

January 21, 2022

சுவீடன் நாட்டை சேர்ந்த சாப் நிறுவனம் தயாரிக்கக்கூடிய AT-4 எனப்படும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் சாப் நிறுவனத்தின் ஒரு பிரிவான FFV ORDNANCE AB மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இடையே கையெழுத்தாகி உள்ளது, ஏற்கனவே நாம் சாப் நிறுவனத்தின் கார்ல் குஸ்தாவ் ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த AT-4 ஆயுத […]

Read More

அமெரிக்க போர்கப்பலை பின்தொடர்ந்த சீன கடற்படை மற்றும் விமானப்படை !!

January 21, 2022

தென் சீன கடல் பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க கடற்படையின் ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பலான USS BENFOLD சீன கடற்படை மற்றும் விமானப்படையால் பின் தொடரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் தங்களது நாட்டு எல்லையிலிருந்து வெளியேறுமாறு சீன கடற்படை வற்புறுத்திய நிலையில் சீன கடற்படை மற்றும் விமானப்படை பின் தொடர்ந்து கப்பலை வெளியேற்றியதாக கூறியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ஏழாவது படையணி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களது கப்பல் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் […]

Read More

புதிய சண்டை சீருடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சையும் மோதலும் !!

January 21, 2022

சமீபத்தில் தரைப்படை தினமன்று இந்திய தரைப்படைக்கான புதிய டிஜிடல் சீருடை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் விரைவில் இவற்றை அனைத்து படை வீரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியால் வடிவமைக்கப்பட்ட இந்த சீருடையை உயர் தரத்துடனும் தகுந்த விலையிலும் தயாரித்து தரும் நிறுவனங்களை அடையாளம் காண டென்டர் விடப்பட்டுள்ளது. அதாவது யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் ஆகவே அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையே கடும் […]

Read More

புதிய துணை ராணுவ தளபதி நியமனம், அடுத்த CDS நியமனத்தில் ஒரு படி முன்னேற்றம் !!

January 21, 2022

இந்திய தரைப்படையின் துணை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் அடுத்த CDS நியமனத்தில் மற்றொரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே தான் அடுத்த கூட்டுபடை தலைமை தளபதியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆகவே முதலில் அடுத்த தரைப்படை தலைமை தளபதிக்கான அதிகாரியை இப்போதே இறுதி செய்ய வேண்டியதாகிறது. ஆகவே ஜெனரல் நரவாணே கூட்டுபடை தலைமை தளபதியாக நியமிக்கபடும் பட்சத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் […]

Read More

17 வயது இந்திய இளைஞர் சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட விவகாரம் !!

January 21, 2022

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தின் பிஷிங் கிராமத்தின் அருகே உள்ள லுங்டா ஜோர் பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் சீன ராணுவத்தால் 18ஆம் தேதியன்று கடத்தப்பட்டு உள்ளார். கடத்தப்பட்ட இளைஞரும் அவரது நண்பரும் இந்திய எல்லைக்குள் காட்டு பகுதியில் வேட்டையாட சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சீன ராணுவத்திடம் இருந்து அவரது நண்பர் மற்றும் தப்பி வந்த நிலையில் அருணாச்சல் கிழக்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தபிர் காவோ இதனை […]

Read More