காஷ்மீரில் தீவிரமாகும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், 6 நாட்களில் 9 பயங்கரவாதிகள் கதை முடிந்தது !!

  • Tamil Defense
  • October 14, 2021
  • Comments Off on காஷ்மீரில் தீவிரமாகும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், 6 நாட்களில் 9 பயங்கரவாதிகள் கதை முடிந்தது !!

கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மீது அதாவது மைனாரிட்டி மக்கள் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து படுகொலைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வந்தன.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு படைகளுக்கு விரைவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி பாதுகாப்பு படைகள் கடந்த 6 நாட்களில் ஒரு முக்கிய பயங்கரவாத கமாண்டர் உட்பட 9 பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளன.

கொல்லப்படோர் ஜெய்ஷ் இ மொஹம்மது கமாண்டர் ஷமீர் அஹமது, அகிப் பஷீர், இம்தியாஸ் அஹமது தார், கானி தார், ஹூசைன் தார், ஹசன் நாய்க்கூ, முக்தார் அஹமது, குபைப் அஹமது மற்றும் அஹமது தார்.

இவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ மொஹம்மது, ஹிஸ்புல் மூஜாஹீதின், லஷ்கர் இ தொய்பா, ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.