அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் சைபர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நிகோலஸ் சைல்லன், இவர் அமெரிக்க விமானப்படையின் முதன்மை மென்பொருள் அதிகாரியாக பணியில் இணைந்தவர் ஆவார். பெண்டகனில் மிகவும் அதிநவீனமான மற்றும் பாதுகாப்பான மென்பொருளை நிர்மானிக்கும் பணியை செய்து வந்த நிலையில் சீனாவின் சைபர் பாதுகாப்பு திறன் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாக கூறி ராஜினாமா செய்தார். இதற்கு காரணமாக பெண்டகன் சைபர் பாதுகாப்பு மற்றும் சுய நுண்ணறிவு திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க தவறியதை […]
Read Moreஅருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு கடந்த 9ஆம் தேதி இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சென்று அம்மாநில சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு சீனா தனது வெளியுறவு செயலர் ஜாவோ லிஜியன் மூலமாக அருணாச்சல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை சீனா அங்கீகரிக்காத நிலையில் இந்திய துணை ஜனாதிபதியின் பயணத்தை கண்டிப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை ஜனாதிபதி மற்றும் இந்திய மாநிலங்களுக்கு பயணிப்பது போல […]
Read Moreஇந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் அர்மீனியா நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்றுள்ளார் அங்கு தனது சகா அராரத் மிர்ஸோயனை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்மீனிய வெளியுறவு அமைச்சர் அராரத் மிர்ஸோயன் இந்தியா அர்மீனாயா இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளதாகவும், அர்மீனியாவின் வளர்ச்சியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மிகப்பெரும் பங்களிப்பினை செய்து வருவதாகவும் கூறிய அவர் தொடர்ந்து, அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் இடையேயான பிரச்சினையில் இந்தியாவின் ஆதரவு மிகப்பெரிய உதவி எனவும், அஸர்பெய்ஜான் […]
Read Moreஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் பாதுகாப்பு வல்லுனருமான மேஜர் ஜெனரல் திபங்கர் பானர்ஜி ஆஃப்கன் வீழ்ச்சிக்கு பிறகு பயங்கரவாத குழுக்கள் காஷ்மீர் மீது கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார். லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் இதர இயக்கங்கள் மூலமாக காஷ்மீரில் தாக்குதல்கள் பாகிஸ்தான் ஒருங்கிணைத்து நடத்தி வருவதாகவும் கூறினார். சமீப காலங்களில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அடாவடித்தனம் சற்றே அதிகரித்துள்ளதை தெளிவாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Moreகல்வான் பள்ளதாக்கு பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோட்டில் இருந்து வெறுமனே 1 கிலோமீட்டர் தொலைவில் சீன ராணுவம் கட்டுமான பணிகளை செய்து வருகிறது. புதிய புதிய கட்டிடங்களை கட்டி வரும் நிலையில் ஃபுக்சே பகுதியில் ஒரு ஆளில்லா விமான தளத்தை கட்டி வருவதாகவும் தெரிகிறது. மலை முகட்டில் இருக்கும் இந்த தளத்தில் இருந்து இந்திய நிலைகள் மற்றும் செயல்பாடுகளை தெள்ள தெளிவாக கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீனா சுரங்கப்பாதை மற்றும் இரண்டு சாலைகளை வெவ்வேறு […]
Read Moreகடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மீது அதாவது மைனாரிட்டி மக்கள் மீது பயங்கரவாதிகள் குறிவைத்து படுகொலைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வந்தன. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு படைகளுக்கு விரைவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்படி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பாதுகாப்பு படைகள் கடந்த 6 நாட்களில் ஒரு முக்கிய பயங்கரவாத கமாண்டர் உட்பட 9 பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளன. கொல்லப்படோர் ஜெய்ஷ் இ மொஹம்மது கமாண்டர் ஷமீர் அஹமது, அகிப் பஷீர், இம்தியாஸ் […]
Read Moreசமீபத்தில் காஷ்மீரில் எல்லை கட்டுபாட்டில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் கொட்டராக்கரா பகுதியை சேர்ந்த சிப்பாய் வைஷாக், மெக்கனைஸ்ட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார். 24 வயதே ஆன இவர் தனது எளிய குடும்ப பிண்ணியையும் பொருட்படுத்தாமல் நாட்டிற்கு சேவையாற்றும் எண்ணத்தில் உலகின் மிக மோசமான சண்டை நடைபெறும் பகுதிகளில் ஒன்றான காஷ்மீரில் பணியை கேட்டு பெற்றுள்ளார். தந்தையை இழந்த […]
Read Moreபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மத்திய கிழக்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலை போல செயல்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் உலகிலேயே அணு ஆயத போர் ஏற்படுத்த கூடிய இடமாக காஷ்மீர் இருப்பதாகவும் வேறு எந்த பகுதியிலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் கூறினார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு என குற்றம்சாட்டி இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியதையும் ஒப்பு கொண்டார்.
Read Moreஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து பதுங்கி இருந்து நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் தரைப்படை தனது 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியனை இதற்கு காரணமான பயங்கரவாதிகளை வேட்டையாட களமிறக்கிய நிலையில் வெற்றிகரமாக அந்த படையணியின் வீரர்கள் அத்தனை பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடித்து கொன்று குவித்து 5 வீரர்களின் இறப்பிற்கு பழி தீர்த்தனர்.
Read Moreபஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் நாயக் மந்தீப் சிங் சீக் லைட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் இடைநிலை அதிகாரியாக பணியாற்றி வந்தார். சில நாட்கள் முன்பு பூஞ்ச் செக்டாரில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த அவரின் உடலுக்கு நேற்று ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது மனைவி மந்தீப் கவுர் கூறும்போது நாட்டிற்காக தன்னுயிர் ஈந்த எனது கணவரை நினைத்து பெருமை அடைகிறேன் என கண்ணீர் மல்க கூறினார். இவன்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் வெறுமனே […]
Read More