எல்லைக்கு நகர்த்தப்படும் சௌரியா ஹைபர்சோனிக் அணுஆயுத ஏவுகணை

  • Tamil Defense
  • October 7, 2020
  • Comments Off on எல்லைக்கு நகர்த்தப்படும் சௌரியா ஹைபர்சோனிக் அணுஆயுத ஏவுகணை

700கிமீ வரை செல்லக்கூடிய சௌரியா ஹைபர்சோனிக் ஏவுகணையை படையில் இணைத்து களத்தில் இறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடிய B-05 ஏவுகணையின் தரை வகை தான் இந்த சௌரியா ஏவுகணை ஆகும்.இதை நமது டிஆர்டிஓ நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் 3 அன்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தியாவின் Strategic Forces Command-ன் கீழ் இந்த ஏவுகணைகள் இரகசிய இடங்களில் விரைவில் களமிறக்கப்பட உள்ளது.160-1000கிகி எடையுடைய வெடிபொருளை இது சுமந்து செல்லக்கூடியது.

இந்திய சீன எல்லை மோதல் தொடர்ந்து வரும் வேளையில் டிஆர்டிஓ தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.