Breaking News

Day: October 7, 2020

அதிபர் புதின் பிறந்தநாளில் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை செய்த இரஷ்யா

October 7, 2020

பேரன்ட் கடற்பகுதியில் இரஷ்யா தனது ஷிர்கான் ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் 68வது பிறந்த நாள் அன்று இரஷ்யா இந்த சோதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு இரஷ்ய பகுதியின் ஓயிட் கடற்பகுதியில் அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.பேரன்ட் கடற்பகுதியில உள்ள ஒரு இலக்கை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.மேலும் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக இரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். 4.30 நொடிகளிலேயே 450கிமீ […]

Read More

50 போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளோம்- பாக் கடற்படை தளபதி

October 7, 2020

பாகிஸ்தான் கடற்படையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20 பெரிய போர்க்கப்பல்கள் உட்பட 50 போர்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக தற்போது ஓய்வு பெற உள்ள பாக் கடற்படை தளபதி அட்மிரல் ஜபார் மம்மூத் அப்பாசி கூறியுள்ளார். சீனத் தயாரிப்பு நான்கு பிரைகேட் கப்பல்களை அடுத்த சில வருடங்களிலும் நடுத்தர ரக துருக்கிய தயாரிப்பு கப்பல்களை 2023-25 ஆண்டுகள் வாக்கில் இணைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் சீன உதவியுடன் எட்டு நீர்மூழ்கிகள் கட்டப்படும் எனவும் நான்கு சீனாவிலும் […]

Read More

OFB தயாரிப்பு கார்பைன் துப்பாக்கிகள் வாங்க இராணுவம் பரிசீலனை

October 7, 2020

இந்தியாவின் ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பு கார்பைன் துப்பாக்கிகளை இந்திய இராணுவம் வாங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “5.56மிமீ குண்டுகளை சுடக்கூடிய கார்பைன் துப்பாக்கிகளை அவசரமாக வாங்க இந்திய இராணுவம் கருத்தில் கொண்டுள்ளது.இந்த துப்பாக்கிகளை லடாக் பிராந்தியத்தில் உள்ள வீரர்களுக்கு வழங்கவும் உள்ளது” என அரசுத் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 1990 இறுதி முதல் ஆர்டினன்ஸ் தொழிற்சாலைகள் தான் இராணுவத்திற்கு தாக்கும் துப்பாக்கிகள் வழங்கும் பிரதான நிறுவனமாக இருந்துள்ளது. இந்திய இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 50000 துப்பாக்கிகள் […]

Read More

மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

October 7, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். தெற்கு காஷ்மீரின் சோபியானில் சுகன் ஏரியா பகுதியில் நேற்று இரவு சண்டை தொடங்கியது.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. காஷ்மீர் காவல் துறை , இராணுவத்தின் 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் தற்போது மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் […]

Read More

எல்லையில் பாக் படைகள் மீண்டும் தாக்குதல்

October 7, 2020

எல்லையில் பாக் படைகள் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.பாரமுல்லா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதலை நடத்தி வருகிறது. சிறிய ரக ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்தியா சார்பில் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.

Read More

லெப்டினன்ட் பார்த்திபன் அவர்களின் நினைவு தினம்

October 7, 2020

இன்று லெட்.பார்த்திபன் கீர்த்தி சக்ரா, 5 JAKLI அவர்களின் நினைவு தினம் ஆகும். அன்று 7 October, 2006  இதே நாளில் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக வீரமரணம் அடைந்தார் நமது மண்ணின் மைந்தர். 1983 ஆகஸ்ட் 21 இராஜபாளையத்தில் மேஜர் வி.நடராஜன் மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு மகனாய் இம்மண்ணில் உதித்தார் அந்த மாவீரன். நாட்டிற்கு சேவை செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசையுடன் 18 மார்ச் 2006ல் படையில் (5 வது ஜம்மு காஷ்மீர்) இணைந்தார். […]

Read More

எல்லைக்கு நகர்த்தப்படும் சௌரியா ஹைபர்சோனிக் அணுஆயுத ஏவுகணை

October 7, 2020

700கிமீ வரை செல்லக்கூடிய சௌரியா ஹைபர்சோனிக் ஏவுகணையை படையில் இணைத்து களத்தில் இறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீர்மூழ்கியில் வைத்து ஏவப்படக்கூடிய B-05 ஏவுகணையின் தரை வகை தான் இந்த சௌரியா ஏவுகணை ஆகும்.இதை நமது டிஆர்டிஓ நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் 3 அன்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவின் Strategic Forces Command-ன் கீழ் இந்த ஏவுகணைகள் இரகசிய இடங்களில் விரைவில் களமிறக்கப்பட உள்ளது.160-1000கிகி எடையுடைய வெடிபொருளை இது சுமந்து […]

Read More

சோபியான் என்கௌன்டர்: இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

October 7, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். தெற்கு காஷ்மீரின் சோபியானில் சுகன் ஏரியா பகுதியில் நேற்று இரவு சண்டை தொடங்கியது.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. காஷ்மீர் காவல் துறை , இராணுவத்தின் 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் தற்போது இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் […]

Read More

சீன உதவியுடன் ஏவுகணை தளங்களை அமைக்கும் பாகிஸ்தான்; அதிர்ச்சி ரிப்போர்ட்

October 7, 2020

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லை மோதல் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தான் சீன உதவியுடன் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணை தளங்களை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து மாதமாக இந்தியாவும் சீனாவும் எல்லையில் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.அமைதியை கொண்டு வர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இன்னும் ஒரு முடிவு கூட எட்டப்படவில்லை. தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளுக்கான தளம் சீன இராணுவம் மற்றும் பாக் இராணுவம் இணைந்து பாக் […]

Read More

திறந்த வெளிப்படையான இந்தோ-பசிபிக்; நால்வர் கூட்டனி முடிவு

October 7, 2020

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து திறந்த வெளிப்படையான பிராந்தியமாக மாற்ற நால்வர் கூட்டனி இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்ற சந்திப்பிற்கு இந்த தகவலை ஜப்பான் வெளியிட்டுள்ளது.ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க செயலர் மைக் பாம்பியோ மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத் தன்மையையும் நிலைநாட்ட நான்கு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன. இந்தோ-பசிபிக் பிராத்தியத்திலும் ,தென்சீனக்கடல் […]

Read More