தேஜாஸ் போர் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் ??

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் மொஹம்மது அஹமது அல் பவார்தி அல் ஃபலாஸி பெங்களூர் நகரில் அமைந்துள்ள HAL நிறுவனத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது மேலும் தேஜாஸ் மற்றும் ஹாக் போர் விமான தயாரிப்பு மையங்கள் காண்பிக்க பட்டது.

பின்னர் அவர் இந்திய விமானப்படையின் விமான தொழில்நுட்ப சோதனைகள் மையத்தையும் பார்வை இட்டார்.

அப்போது அவர் நமது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் அதிக ஆர்வம் காட்டினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேஜாஸ் போர் விமானம் 50% இந்திய தொழில்நுட்பத்தை கொண்டது, அதே நேரத்தில் அமெரிக்க என்ஜின், இஸ்ரேலிய, ரஷ்ய தொழில்நுடபங்களும் உள்ளன,

இதன் காரணமாக குறைந்த விலையில் அதிநவீன போர் விமானம் என்ற அந்தஸ்தை தேஜாஸ் கொண்டுள்ளது. மேலும் வானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்த போர் விமானத்தை வாங்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.