
கல்வானில் ஏற்கனவே மோதல் ஏற்பட்ட பகுதியில் இருந்து சீனத்துருப்புகள் 2கிமீ தூரம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக சீன அத்துமீறி ஃபபர் ஷோன் பகுதியை ஆக்கிரமித்து பங்கர்கள் மற்றும் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தது.தவிர சென்ற மாதம் 15ம் தேதி இரவு நடைபெற்ற கடும் சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதன் பிறகு இரு நாடுகளும் இரு முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் இரு நாடுகளும் பின்வாங்க உறுதி அளித்தன.ஆனால் சீனாவை நம்ப இயலாது எனஇந்தியா தொடர்ந்து படைக்குவிப்பில் ஈடுபட்டது.
தற்போது பிரச்சனைக்குரிய சண்டை நடைபெற்ற கல்வான் பகுதியில் இருந்து சீனப்படைகள் 2கிமீ தூரம் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.